வங்கக் கடலில் சென்னையில் இருந்து
கிழக்கு தென்கிழக்கில் 560 கி.மீ. தொலைவில் உள்ள மொன்தா புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்குத் தொடர்ச்சி மழையால் மேகமலை அருவியில் கடும் வெள்ளம். பாதுகாப்புத் தடுப்புகள் சேதமடைந்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 10-ஆம் நாளாக நீடிக்கிறது.

சென்னை மணலி புதுநகர் அருகே கொசஸ்தலை ஆற்றில் மதுபோதையில் ரூ.1,000 பந்தயம் கட்டி நீச்சல் போட்டியில் ஈடுபட்ட இருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆஜராக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமாருக்கு சிபிஐ சம்மன்

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்.

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வாலாஜாபாத் - அவலூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 30 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

திருச்செந்தூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்வைக் காண குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் 4,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று மாலை 4.15 மணிக்கு வெளியிட உள்ளதாகத் தகவல்.