Tamilnadu Roundup: 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு, ராமேஸ்வரம் மீனவர்கள் கைது, தங்கம் விலை குறைவு - பரபரப்பான 10 மணி செய்திகள்

4 months ago 5
ARTICLE AD

சத்தீஸ்கரில் கேரளாவைச் சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்ட விவகாரம், வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்.

2-வது கட்டமாக, சிவகங்கை மாவட்டத்தில் இன்று தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்காமல் இருப்பது, அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.

சாதிய ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டியது ஆளும் அரசின் பொறுப்பும் கடமையுமாகும் என சீமான் வலியுறுத்தல்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை கைது செய்ததோடு, விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனை. ஒரு கிராம் ரூ.9,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் வரும் 3-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு. அணையிலிருந்து 16 கண் மதகுகள் வழியாக 92 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்.

நெல்லை பாப்பாகுடியில், காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 500 இடங்களில் EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க மாநில பசுமை எரிசக்தி நிறுவனம் முடிவு.

Read Entire Article