மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக திருச்சி சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் - திமுகவினர், பொதுமக்கள் வரவேற்பு

ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் தமிழ்நாடு அரசு இன்று பேச்சுவார்த்தை

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் பூந்தமல்லி - வடபழனி இடையே வரும் 15ம் தேதி சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டு, அதற்காக முழு வீச்சில் பணிகள் நடக்கின்றன

மீண்டும் 1 லட்சத்தை தாண்டியது ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 கூடி 1,00,640க்கு விற்பனையாகிறது.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 இந்திய மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

புத்தாண்டு தினத்தன்று தமிழ்நாட்டில் 545 குழந்தைகள் பிறந்தன!

வரும் 5ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தேமுதிக அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ட்ராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயம்

தமிழ்நாடு - கேரளா எல்லையான போடி மெட்டு சாலையின் 11வது கொண்டை ஊசி வளைவில், கனமழையால் மண் சரிவு இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு

குன்னூரில் கனமழையால் மண் சரிவு - மின் கம்பங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணைப் பகுதியில் 23 செ.மீ மழைப்பொழிவு

தென்காசி: குற்றால அருவிகளில் நேற்றிரவு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந்தாலும், அதிகளவில் தண்ணீர் விழுவதால் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது

ஆருத்ரா தரிசன விழாவை ஒட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடக்கம் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகளும் தனித்தனி தேர்களில் வீதியுலா

கோவை: குனியமுத்தூர் அருகே கடந்த மாதம் 25ம் தேதி பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கார் ஓட்டுநரான கிருஷ்ணமூர்த்தி கைது 80 சவரன் நகைகள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன

நெல்லை: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் இன்று வரவேண்டம் என வனத்துறை அறிவுறுத்தல்