Tamilisai Soundararajan: "எடப்பாடி தான் அடுத்த சிஎம்!" – ஏபிபி நாடு பேட்டியில் அடித்துச் சொன்ன தமிழிசை

1 month ago 7
ARTICLE AD

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஏபிபி நாடுக்கு கொடுத்த பேட்டியில் உறுதியாக தெரிவித்தார்.

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மேலூர் பகுதியில் உள்ள திருவுடையம்மன் கோயிலில் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது ஏபிபி நாடுவிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் எனவும், எடப்பாடி முதல்வராக வருவார் எனவும் தெரிவித்தார். விசில் சத்தம் குறைவாக கேட்கிறது சொன்னீர்களே என்ற கேள்விக்கு, தவெகவினர் 200, 250 சீட் வெற்றி பெறுவார்கள் சொன்னதற்காக பற்றி தெரிவித்தேன் என்றார்.

பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பௌர்ணமி நாளில் திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியுடையம்மன் ஆகிய மூன்று தேவியை வணங்கிட வேண்டும் என வந்துள்ளதாக கூறினார். தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும், தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்று மாற்றம் வர வேண்டும் எனவும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறினார்.

18 மாநிலங்களில் உள்ள டபுள் என்ஜின் அரசு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவது போல, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்து பிரதமர் மோடியுடன் இணைந்து தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்றும், 4-ஆம் தேதி  தமிழ்நாட்டு மக்கள் நல்லதை அருள்வார்கள் என்றார்.

4ஆம் தேதி வரை காத்திருங்கள்

கருத்துக் கணிப்புகள் குறித்த கேள்விக்கு, கருத்துக் கணிப்புகள் ஒரு மாதிரியாக உள்ளதா, ஒரு மாதிரியாக உள்ளதா என இழுவையாக கேள்வி எழுப்பிய தமிழிசை, exit polls are not exact polls, எனவும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் சரியானவை அல்ல எனவும் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார்.

வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, உலக அளவில் போர் நடந்து கொண்டிருக்கிறது என்றும், பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது, ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவில்லை எனவும் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை என்றார்.

மேலும் படிக்க: "குதிரை பேரத்தைத் தடுக்க விஜய்யின் மாஸ்டர் பிளான்?" - வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உடனே பனையூர் வர வேண்டும் - விஜய் அதிரடி உத்தரவு

சிலிண்டர் விலை உயர்வு தற்காலிகமே

வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிகமான மாற்றம் மட்டுமே என கூறினார். 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு விலை ஏற்றம் ஏன் என்ற கேள்விக்கு, போர் எப்போது நடந்து கொண்டிருக்கிறது, போரின் தாக்கம் எப்போது இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும் எனவும் நமது நாட்டை பிரதமர் பாதுகாப்பாக வைத்துக் கொண்டுள்ளார் என கூறினார்.

திமுகவிற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வந்தால், உங்கள் நிலைப்பாடு என்ற கேள்விக்கு, மக்கள் எங்களுக்கு சாதகமாக வாக்குகளை தந்திருப்பார்கள் என நம்புவதாக பதில் அளித்தார்.

Read Entire Article