Tamil Thalaivas : தொடர்ந்து பெஞ்சில் மொயின் ஷபாகி! கேரியரில் விளையாடதீங்க! திருந்தாத தமிழ் தலைவாஸ்..
2 months ago 5
ARTICLE AD
ப்ரோ கபடியின் ஒரு சீசனின் பிரகாசமான ஆட்டம் அடுத்த சீசனில் மறக்கப்பட்டுவிடும். அணியை தன் தோள்களில் சுமந்த ஒரு வீரர் கூட திடீரென பெஞ்சில் அமர்த்தப்படலாம். அப்படித்தான் இந்த சீசனில் தமிழ் தலைவாஸ்  ஈரானிய ரெய்டர் மொயின் ஷபாகி எதிர்கொள்ளும் நிலைமை.
கடந்த சீசனில் பிரகாசம்
அவரது சீரான ஆட்டம், 75% ரெய்ட்களில் “நாட்-ஆவுட்” நிலையைத் தக்கவைத்தது. பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் போன்ற அணிகளுக்கு எதிரான வெற்றிகளில் அவர் மெட்ச்-வின்னர் ஆனார். இந்திய ரெய்டர்களால் ஆட்கொள்ளப்பட்ட லீக்கில் ஒரு வெளிநாட்டு வீரருக்கு இது சாதாரண விஷயமல்ல. கடந்த ஆண்டு தமிழ் தலைவாஸ் மோசமானதாக அமைந்தாலும் மொயினின் ஆட்டம் சற்று ஆறுதலாக அமைந்தது.
சீசன் 12-ல் மாற்றம்
இந்த சீசனில் கதையே  மாறிவிட்டது. சீசன் 12-ல் ஷபாகிக்கு போதிய வாய்ப்புகள் . டாக்க்டிக்கல் முடிவுகளா, ரொட்டேஷன் கொள்கையா, அல்லது உள்நாட்டு திறமைகளுக்கு முன்னுரிமையா என்பது தெரியவில்லை. ஆனால், இவருக்கான வாய்ப்பு குறைக்கப்பட்டிருப்பது அவரது வளர்ச்சியையே தடுக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
கபடி என்பது வெறும் பலத்திலேயே இல்லாமல், ரிதம் முக்கியம். நீண்ட நேரம் விளையாடமல் இருந்தால் ஒரு ரெய்டர் தன் ரிதம்மை இழந்துவிடுவார்.
ஆசிய விளையாட்டு முன் முக்கிய தருணம்
அடுத்த ஆண்டு ஆசிய விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளன. அங்கே ஈரானுக்கு ஷபாகி சாதாரண ரெய்டரல்ல அணிக்கு மிக முக்கிய வீரமும் . 2018-ல் தங்கமும், கடைசிச் சீசனில் வெள்ளியும் வென்ற ஈரான், 2026-ல் இந்தியாவுக்கு சவாலாக இருக்க வேண்டுமெனில் ஷபாகி போன்றவர்கள் உச்ச நிலையில் இருக்க வேண்டும்.
லீக் மட்டத்திலும் இது ஒரு கேள்வி. வெளிநாட்டு ரெய்டர்கள் வெற்றி பெறும்போது, ப்ரோ கபடி ஒரு உலகளாவிய லீக்காக அங்கீகாரம் பெறுகிறது. ஆனால்,  தனது திறமையை காட்டிய வீரர்கள் புறக்கணிக்கப்படும்போது அந்தச் செய்தியையே குலைக்கிறது.
வெளிநாட்டு வீரர்களுக்கு தவறான சிக்னல்?
ஷபாகி தனது திறமையை நிரூபித்துவிட்டார். அழுத்தமான தருணங்களில் ஆட்டத்தை மாற்றும் குணம் அவருக்கு உள்ளது. இப்படிப்பட்ட ஒருவரை புறக்கணிப்பது, அவருக்கே மட்டுமல்ல – ப்ரோ கபடியை பிளாட்ஃபார்மாக கருதும் பிற வெளிநாட்டு வீரர்களுக்கும் தவறான சிக்னலை தருகிறது.
மொயின் ஷபாகி வெறும் அணியின் ஓர் அங்கமல்ல. அவர் இந்தியாவின் வேர்களையும், கபடியின் உலகளாவிய எதிர்காலத்தையும் இணைக்கும் பாலம். கடந்த சீசனில் அவர் தன் இடத்தை நிரூபித்தார். இந்த சீசன் அவருக்கு பெரிய வாய்ப்பு கொடுத்து, ஆசிய விளையாட்டுகளுக்கான தயாரிப்பை செய்ய வேண்டியது தான்.
ஆனால் இன்று அவர் காத்திருப்பது பெஞ்சில், மொயின் வெறும் வெளிநாட்டு வீரர் அல்ல, உலக கபடியின் எதிர்கால சின்னமாக இருக்கிறார்,
Read Entire Article