Tamil New Year 2026 Wishes: வாழ்வு செழிக்க.. தமிழ் புத்தாண்டுக்கு புதுமையான வாழ்த்துகளை தட்டிவிடுங்க! 10 நச் பாயிண்ட்ஸ்

19 hours ago 1
ARTICLE AD

வழக்கமான சம்பிரதாயமான வாழ்த்துகளைத் தவிர்த்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் அனுப்பும் வகையிலான 10 மாஸான, ட்ரெண்டியான தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் இதோ:

அக்கவுண்ட்ல பணமும், மனசுல நிம்மதியும் எப்பவும் ஃபுல்லா இருக்கிற மாதிரி ஒரு அட்டகாசமான வருஷமா இது அமையட்டும். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

"நமக்கான நேரம் எப்போ வரும்?"னு இத்தனை நாளா காத்துக்கிட்டு இருந்தீங்கல்ல.. அந்த நேரம் இந்த வருஷம் ஆரம்பிச்சிருச்சு. நீங்க தொட்ட காரியம் எல்லாமே சக்சஸ் ஆகுறதும், உங்கள சுத்தி இருக்கிறவங்க ஆச்சரியப்படுற அளவுக்கு நீங்க பெரிய ஆளா வளருறதும் இந்த சித்திரையில இருந்து கண்டிப்பா நடக்கும். நெனச்சதெல்லாம் நிஜமாகும் இந்த புத்தாண்டுல நீங்க ஜெயிக்க வாழ்த்துகள்!

லைஃப்ல எவ்ளோ பிரச்சனை வந்தாலும் அதையெல்லாம் சிரிச்சுக்கிட்டே ஈஸியா கடந்து போற அந்த 'பாசிட்டிவ் வைப்' உங்களுக்கு இந்த வருஷம் முழுக்க இருக்க வாழ்த்துகள்!

வேப்பம்பூ கசப்பும், மாங்காய் புளிப்பும் லைஃப்ல அப்பப்போ வந்துட்டு போனாலும், வெல்லம் மாதிரி அந்த இனிப்பான தருணங்கள்தான் இந்த வருஷம் முழுக்க உங்களுக்கு அதிகமா இருக்கட்டும். சின்ன சின்ன ஆசைகள்ல இருந்து பெரிய பெரிய கனவுகள் வரைக்கும் எல்லாமே தடங்கலில்லாம நிறைவேறுற ஒரு சூப்பரான வருஷமா இது அமையட்டும்!

இந்த வருஷம் உங்களுக்கு எந்த உடல்நலப் பிரச்சினைகளும் வராம, மருத்துவமனை பக்கமே போகாத அளவுக்கு ஆரோக்கியமா இருக்கணும். கவலைகள் குறைஞ்சு, நிம்மதி மட்டுமே உங்கள சுத்தி இருக்க இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த தமிழ் புத்தாண்டுல இருந்து உங்களோட புது வெர்ஷன நீங்களே பாக்கப் போறீங்க. பழைய கவலைகளுக்கு குட்பை சொல்லிட்டு, புதுசா ஒரு வாழ்க்கைய தொடங்குங்க. கெத்தா, மாஸா ஆண்டைத் தொடங்க அட்வான்ஸ் வாழ்த்துகள்!

இன்னும் கொஞ்சம் மண் மணத்தோடு, பாரம்பரியமாக வாழ்த்துச் சொல்ல வேண்டுமா? இதோ!

உழவின் பெருமையும், உழைப்பின் அருமையும் உயர்ந்து நிற்கும் இந்த நன்னாளில், களஞ்சியம் நிறைய தானியங்களும், இல்லம் நிறைய சந்தோஷங்களும் பெருகட்டும். சித்திரைச் சூரியனின் கதிர்கள் உங்கள் இல்லத்தின் இருள் விலக்கி ஒளி பாய்ச்சுவது போல, வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி நல்வாய்ப்புகள் உங்களைத் தேடி வரட்டும். நெஞ்சார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

இல்லறம் சிறக்க, உற்றார் உறவினர்கள் சூழ்ந்து மகிழ, உங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் அரங்கேறும் ஆண்டாக இது அமையட்டும். தலைமுறைகள் தாண்டி நம் பாரம்பரியம் தழைக்கவும் நீங்கள் சீரும் சிறப்புமாக வாழ, மங்களகரமான புத்தாண்டு வாழ்த்துகள்!

நேற்றைய (ஏ)மாற்றங்கள் அனைத்தும் பழங்கதையாகிப் போகட்டும். இன்று பிறக்கும் சித்திரை முதல் நாள், உங்கள் வாழ்வில் ஒரு புதிய வெளிச்சத்தைக் கொண்டு வரட்டும். மங்கலம் பொங்க, வளம் யாவும் சேர, தொய்வில்லாத நிம்மதி உங்கள் இல்லத்தை வந்தடையட்டும். சித்திரைப் பூக்களாய் உங்கள் முகத்தில் என்றும் புன்னகை மலர்ந்திருக்க வாழ்த்துகள்!

இவற்றில் உங்கள் ரசனைக்கு ஏற்றதை அப்படியே காப்பி செய்து, ஸ்டேட்டஸாகவோ அல்லது மெசேஜாகவோ தட்டி விடுங்கள்!

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Read Entire Article