Tamil Nadu Election: அரசியல் களத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக: முதல் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு?

2 hours ago 1
ARTICLE AD

எல்லாவற்றுக்கும் ஆரம்பம் உண்டு. அந்த வகையில் நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் முதல் தேர்தல் என்று ஒன்று இருந்திருக்கும். அதில் தமிழக அரசியல் களத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்கு சதவீதத்தைக் காணலாம்.

இதில் அதிகபட்சமாக எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, 1977ஆம் ஆண்டு 30 சதவீதத்துக்கும் அதிகமான தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை அள்ளியதே வரலாறாக உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக): திமுக தொடங்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு தனது முதல் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. அப்போது 14 % வாக்குகளைப் பெற்றது. (அப்போது திமுக சுயேச்சையாகப் போட்டியிட்டது).

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக): 1977ஆம் ஆண்டு சந்தித்த தனது முதல் தேர்தலில் அதிமுக 30.4% வாக்குகளைப் பெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக): 1991ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் 5.8% வாக்குகளைப் பதிவு செய்தது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக): 1996-ம் ஆண்டு முதல்முறையாகக் களம் கண்டபோது 5.8% வாக்குகளைப் பெற்றது.

தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா): 1996-ம் ஆண்டிலேயே களமிறங்கிய இந்தக் கட்சி தனது முதல் தேர்தலில் 9.3% வாக்குகளைப் பெற்றது.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக): 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலாகப் போட்டியிட்டு 8.4% வாக்குகளைப் பெற்றது.

நாம் தமிழர் கட்சி (நாதக): 2016-ம் ஆண்டு தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் 1.07% வாக்குகளைப் பெற்றது.

மக்கள் நீதி மய்யம் (மநீம): 2021-ல் நடந்த தனது முதல் தேர்தலில் 2.6% வாக்குகளைப் பெற்றது.

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தவெக

இந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் தவெக முதன்முறையாகக் களம் காண்கிறது. இதில் தவெக எவ்வளவு வாக்குச் சதவீதத்தைப் பெறும், அதிமுக படைத்த வரலாற்றை மாற்றி எழுதுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

முன்னதாக உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுமாறு விஜய் அறிவுறுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் சுயேச்சையாக உள்ளாட்சித் தேர்தல்களில் நின்றனர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article