Taj Mahal Night View: இந்த அழக மிஸ் பண்ணாதீங்க..! தாஜ்மஹாலை நிலவொளியில் சுற்றிபார்ப்பது எப்படி? நைட் ரூல்ஸ் இதுதான்?

1 year ago 7
ARTICLE AD

Taj Mahal Night View Dates 2024:  தாஜ்மஹாலை இரவு நேரத்தில் நேரில் பார்ப்பதகு முதலில் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

தாஜ்மஹால் இரவு நேர காட்சி:

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் உலகின் மிக அழகான நினைவுச்சின்னங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள வெள்ளை பளிங்குக் கல்லால் கட்டப்பட்டுள்ள முகலாயர் கால அழகைக் காண, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டில் ஒருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். எந்த நேரத்திலும் காண்போரை பிரமிக்கச் செய்தாலும்,  அதை இரவில் நிலவொளியில் பார்க்கும் அனுபவம் நிகரற்றது மற்றும் மறக்க முடியாததாக அமையும். முழு நிலவின் மென்மையான ஒளியின் கீழ், தாஜ்மஹால் ஒளி மற்றும் நிழலின் காட்சியாக மாறி, ஒரு மாய ஒளியைப் பெற்று ரம்மியமான காட்சியாய் கண்களுக்கு விருந்தளிக்கிறது. ஆனால், தாஜ்மஹாலை இரவில் பார்க்க எல்லா நாட்களிலும் அனுமதி வழங்கப்படாது என்பது தெரியுமா?

மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே அனுமதி:

தாஜ்மஹாலை இரவு நேரத்தில் காண ஒரு மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதுவும் பௌர்ணமி இரவு மற்றும் பௌர்ணமிக்கு முன்னும் பின்னும் இரண்டு இரவுகள் ஆகிய நாட்களில் மட்டுமே ஆகும். நிலவொளி அந்த கட்டடத்தின் மென்மையான, வெள்ளி நிறத்தில் கண்களை கவரும் விதமாக காட்சியளிக்கிறது. கம்பீரமான கட்டமைப்பின் சிக்கலான கைவினைத்திறனை மேலும் மேம்படுத்துகிறது. காரணம் அதில் பதிக்கப்பட்டுள்ள வெள்ளை பளிங்கு கற்கள்,  முழு நிலவின் கீழ் ஒளிரும். கட்டடக்கலை அதிசயம் இருண்ட வானத்திற்கு எதிராக மின்ன, பார்வையாளர்கள் இந்த அனுபவத்தை மயக்கும் அனுபவமாக விவரிக்கிறார்கள்.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதி:

அதிக மக்கள் கூட்டம் இருக்கும் பகல் நேரத்தில் போலல்லாமல்,  ​​அதிகாலை அல்லது இரவு வருகை மிகவும் அமைதியான சூழ்நிலையை வழங்குகிறது. பௌர்ணமி இரவுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கயிலான நுழைவுச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதால்,  குறைவான நெரிசல் அந்த அழகை முற்றிலுமாகவும், மனதார கண்டு மகிழ்ந்திடவும் வாய்ப்பு அளிக்கிறது. பகல் நேர கூட்ட நெரிசல் இல்லாமல் நிலவொளியில் குளித்த்துக் கொண்டிருக்கு தாஜ்மஹாலை படம்பிடிக்க விரும்பும், புகைப்பட ஆர்வலர்களுக்கு முழு நிலவு இரவு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், கையடக்க கேமராக்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுகின்றன. உங்களது ஸ்மார்ட்போனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரதான வாயிலின் சிவப்பு மணற்கல் தளம், காட்சிக்கான சிறந்த வியூ பாயிண்ட் ஆகும்.

தாஜ்மஹால் இரவு வருகைக்கு திட்டமிடுவது எப்படி?

பௌர்ணமி இரவில் தாஜ்மஹாலைப் பார்வையிட முன்கூட்டியே திட்டமிடல் அவசியம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படுகின்றன. எனவே அதிக தேவை நிலவுவதால் அவற்றை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.  தாஜ்மஹால் வெள்ளிக்கிழமை மற்றும் ரம்ஜான் மாதத்தில் இரவு பார்வைக்காக மூடப்பட்டிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தாஜ்மஹால் இரவு காட்சி: நேரம் & விதிகள் என்ன?

தாஜ்மஹாலை குறிப்பிட்ட நாட்களில் இரவு நேரத்தில் பார்க்க, இரவு 8 மணி முதல் 11:59 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்

8 பேட்ச்களாக தலா 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

ஒவ்வொரு பேட்ச்சுக்கும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க 30 நிமிட அவகாசம் வழங்கப்படும்

சுற்றுலாப்பயணிகள் தாஜ்மஹால் அருகே உள்ள ஷில்ப்கிராமில் தங்கள் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பார்வை இடத்துக்கு அரை மணி நேரத்திற்கு முன் பாதுகாப்பு சோதனைகளுக்காக வந்தடைய வேண்டும்

ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்

டிக்கெட்டுகளை எங்கு முன்பதிவு செய்யலாம்?

தாஜ்மஹால் இரவுக் காட்சி டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ இணையதளங்களான - tajmahal.gov.in மற்றும் asi.paygov.org.in - மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

எப்படி முன்பதிவு செய்வது?

tajmahal.gov.in என்ற இணையதள முகவரியை அணுகவும்

'டிக்கெட்டுகளை மட்டும் வாங்க இங்கே கிளிக் செய்யவும்' அல்லது 'தாஜ்மஹால் இரவு காட்சி டிக்கெட்டுகள்' என்ற டேபை கிளிக் செய்யவும்

இந்திய தொல்லியல் துறை (ASI) தளமான asi.paygov.org.in க்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள் (நீங்கள் நேரடியாக இந்தப் பக்கத்தையும் திறக்கலாம்)

'சிட்டி' என்பதன் கீழ் ஆக்ராவையும், 'நினைவுச்சின்னங்கள்' என்பதன் கீழ் 'தாஜ்மஹால் இரவுக் காட்சியையும்' தேர்ந்தெடுக்கவும்

தாஜ்மஹால் இரவுக் காட்சிக்கான தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

'தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்

டிக்கெட் விலை என்ன?

பெரியவர்கள் (இந்தியர்கள்): ரூ 510

பெரியவர்கள் (வெளிநாட்டவர்கள்): ரூ 750

குழந்தைகள் (3-15 வயது): இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இருவருக்கும் ரூ.500

தாஜ்மஹால் இரவு காட்சி: 2024-25 இல் முழு நிலவு தேதிகள்:

நடப்பு நிதியாண்டில் தாஜ்மஹால் இரவு பார்வைக்காக திறக்கப்படும் முழு நிலவு தேதிகளை ASI வெளியிட்டுள்ளது.

1. ஆகஸ்ட் 19, 2024 - திங்கள்
2. செப்டம்பர் 18, 2024 - புதன்கிழமை
3. அக்டோபர் 17, 2024 - வியாழன்
4. நவம்பர் 15, 2024 - வெள்ளி
5. டிசம்பர் 15, 2024 - ஞாயிறு
6, ஜனவரி 13, 2025 - திங்கள்
7. பிப்ரவரி 12, 2025 - புதன்
8. மார்ச் 13, 2025 - வியாழன்

Read Entire Article