ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்றது. மும்பையில் உள்ள அம்பானியில் பிரபல இல்லமான ஆண்டிலியாவில் நடைபெற்ற இந்த திருமணத்தில் சர்வதேச திரை பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் , மல்யுத்த வீரர் ஜான் சீனா , பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் உட்பட தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் , சூர்யா ஜோதிகா , அட்லீ ப்ரியா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு மொத்தம் 5000 கோடிகளை அம்பானி குடும்பம் செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

அம்பானி திருமணத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை

ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாத திரை பிரபலங்கள் மிக குறைவே. அதில் நடிகை டாப்ஸியும் ஒருவர். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்ப பட்டபோது டாப்ஸி விளக்கமளித்துள்ளார். “ எனக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது. திருமணம் என்பது மிகவும் தனிப்பட்ட ஒரு நிகழ்வு. நிச்சயமாக அவர்களை தெரிந்தவர்கள் நிறைய நபர்கள் இருப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை திருமண வீட்டாருடன் ஏதோ ஒருவகையில் சின்ன உரையாடல் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பேன்” என்று டாப்ஸி கூறியுள்ளார். டாப்ஸின் கருத்து சமூக வலைதளங்களில் பலவிதமான எதிர்வினைகளை பெற்று வருகிறது. டாப்ஸியின் கருத்தை ஆதரித்து சிலரும் அவரை விமர்சித்து சிலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். அம்பானி வீட்டு திருமணத்தில் டாப்ஸிக்கு அழைப்பு வரவேயில்லை என்று நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

நடிகர் டாப்ஸி தனது நீண்ட நாள் காதலனான மாத்தியாஸ் போவை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார். அவரது கருத்திற்கு ஏற்றார்போல் தனது திருமணத்தை பெரிய ஆடம்பரங்கள் இல்லாமல் தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் அவரது திருமணம் நடைபெற்றது.

மேலும் படிக்க : Viduthalai 2 first look: இது வாத்தியாரின் காதல்...! வெளியானது விடுதலை 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Sardar 2: கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து: 20 அடி பள்ளத்தில் விழுந்து சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு