Top 10 News Headlines: வரைவு வாக்காளர் பட்டியல் ரிலீஸ்.. குறைந்த தங்கம் விலை... 11 மணி வரை இன்று!

1 hour ago 1
ARTICLE AD

அரசியல் கூட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு டிசம்பர் 19ம் தேதியான இன்று ரூ.480 குறைந்துள்ளது. இதன்மூலம் ஒரு சவரன் ரூ.99,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.12,380க்கு விற்பனையாகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனுமன் கோயில்களில் இன்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம். சுசீந்திரம், நாமக்கல் ஆகிய இடங்களில் ஆஞ்சநேயருக்கு 1008 வடைமாலை சாற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. எஸ்.ஐ.ஆர் படிவங்கள் நிரப்பி கொடுத்த பிறகு இந்த பட்டியல் வெளியாகவுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேச பக்தி பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் மக்களவையில் ஒலிக்கப்பட்டது.அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை நிதி அகர்வாலிடம் ரசிகர்களில் சிலர் அநாகரிகமாக நடந்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் இருந்து 160 பேருடன் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் இறங்கும்போது டயர் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வங்கதேசத்தின் முன்னணி செய்தித்தாள்களான தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதோம் அலி அலுவலகங்களுக்கு தீ வைத்த போராட்டக்காரர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெற்கு அமெரிக்க நாடான ஈக்வடாரில் பிரபல கால்பந்து வீரர் மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே இடத்தில் மற்றொரு நபரும் கொலை செய்யப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Read Entire Article