T20 world cup 2026 Schedule: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி பிப்ரவரி 15ம் தேதி நடைபெற உள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டி:

அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இணைந்து நடத்தும், டி20 உலகக் கோப்பைக்கான முழு போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று அசத்திய இந்திய அணி, உள்ளூரில் நடைபெறும் போட்டியில் மீண்டும் அசத்திய கோப்பையை கைப்பற்ற முனைகிறது.

டி20 உலகக் கோப்பைக்கான மைதானங்கள்:

இந்தியாவில் 5 மற்றும் இலங்கையில் 3 என மொத்தம் 8 மைதானங்களில் 55 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, உள்ளூரில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இலங்கையில் கொழும்புவில் உள்ள இரண்டு மைதானங்கள் மற்றும் கண்டியில் உள்ள ஒரு மைதானத்தில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகள்:

நவீன கால ஜாம்பவான்களான தோனி, ரோகித் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரில் ஒருவர் கூட இல்லாமல் இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் களம் காண்கிறது. இத்தாலி அணி முதன்முறையாக உலக்க் கோப்பையில் பங்கேற்க உள்ளது. 20 அணிகள் விளையாட உள்ள இந்த போட்டியானது லீக் சுற்று, சூப்பர் 8, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

டி20 உலகக் கோப்பை - போட்டி அட்டவணை:

க்ரூப் A

பிப்ரவரி 7: பாகிஸ்தான் vs நெதர்லாந்து – கொழும்பு – காலை 11:00 மணி

பிப்ரவரி 7: இந்தியா vs அமெரிக்கா – மும்பை – இரவு 7:00 மணி

பிப்ரவரி 10: பாகிஸ்தான் vs அமெரிக்கா – கொழும்பு – இரவு 7:00 மணி

பிப்ரவரி 12: இந்தியா vs நமீபியா – டெல்லி – இரவு 7:00 மணி

பிப்ரவரி 13: அமெரிக்கா vs நெதர்லாந்து – சென்னை – இரவு 7:00 மணி

பிப்ரவரி 15: அமெரிக்கா vs நமீபியா – சென்னை – பிற்பகல் 3:00 மணி

பிப்ரவரி 15: இந்தியா vs பாகிஸ்தான் – கொழும்பு – இரவு 7:00 மணி

பிப்ரவரி 18: பாகிஸ்தான் vs நமீபியா – கொழும்பு – பிற்பகல் 3:00 மணி

பிப்ரவரி 18: இந்தியா vs நெதர்லாந்து – அகமதாபாத் – இரவு 7:00 மணி

க்ரூப் - B

பிப்ரவரி 8: இலங்கை vs அயர்லாந்து - கொழும்பு - இரவு 7:00 மணி

பிப்ரவரி 9: ஜிம்பாப்வே vs ஓமன் - கொழும்பு - பிற்பகல் 3:00 மணி

பிப்ரவரி 11: ஆஸ்திரேலியா vs அயர்லாந்து - கொழும்பு - பிற்பகல் 3:00 மணி

பிப்ரவரி 12: இலங்கை vs ஓமன் – கண்டி – காலை 11:00 மணி

பிப்ரவரி 13: ஆஸ்திரேலியா vs ஜிம்பாப்வே - கொழும்பு - காலை 11:00 மணி

பிப்ரவரி 14: அயர்லாந்து vs ஓமன் – கொழும்பு – காலை 11:00 மணி

பிப்ரவரி 16: ஆஸ்திரேலியா vs இலங்கை – கண்டி – இரவு 7:00 மணி

பிப்ரவரி 19: இலங்கை vs ஜிம்பாப்வே - கொழும்பு - பிற்பகல் 3:00 மணி

பிப்ரவரி 20: ஆஸ்திரேலியா vs ஓமன் – கண்டி – இரவு 7:00 மணி

க்ரூப் - C

பிப்ரவரி 7: மேற்கிந்திய தீவுகள் vs வங்கதேசம் - கொல்கத்தா - பிற்பகல் 3:00 மணி

பிப்ரவரி 8: இங்கிலாந்து vs நேபாளம் – மும்பை – பிற்பகல் 3:00 மணி

பிப்ரவரி 9: வங்கதேசம் vs இத்தாலி – கொல்கத்தா – காலை 11:00 மணி

பிப்ரவரி 11: இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள் – மும்பை – இரவு 7:00 மணி

பிப்ரவரி 14: இங்கிலாந்து vs வங்கதேசம் – கொல்கத்தா – பிற்பகல் 3:00 மணி

பிப்ரவரி 15: மேற்கிந்திய தீவுகள் vs நேபாளம் - மும்பை - காலை 11:00 மணி

பிப்ரவரி 16: இங்கிலாந்து vs இத்தாலி – கொல்கத்தா – பிற்பகல் 3:00 மணி

பிப்ரவரி 17: வங்கதேசம் vs நேபாளம் – மும்பை – இரவு 7:00 மணி

பிப்ரவரி 19: மேற்கிந்திய தீவுகள் vs இத்தாலி - கொல்கத்தா - காலை 11:00 மணி

க்ரூப் - D

பிப்ரவரி 8: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் – சென்னை – காலை 11:00 மணி

பிப்ரவரி 9: தென்னாப்பிரிக்கா vs கனடா – அகமதாபாத் – இரவு 7:00 மணி

பிப்ரவரி 10: நியூசிலாந்து vs யுஏஇ – சென்னை – பிற்பகல் 3:00 மணி

பிப்ரவரி 11: தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் – அகமதாபாத் – காலை 11:00 மணி

பிப்ரவரி 13: கனடா vs யுஏஇ – டெல்லி – பிற்பகல் 3:00 மணி

பிப்ரவரி 14: நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா – அகமதாபாத் – இரவு 7:00 மணி

பிப்ரவரி 16: ஆப்கானிஸ்தான் vs யுஏஇ – டெல்லி – காலை 11:00 மணி

பிப்ரவரி 17: நியூசிலாந்து vs கனடா – சென்னை – காலை 11:00 மணி

பிப்ரவரி 18: தென்னாப்பிரிக்கா vs யுஏஇ – டெல்லி – காலை 11:00 மணி

பிப்ரவரி 19: ஆப்கானிஸ்தான் vs கனடா – சென்னை – இரவு 7:00 மணி

உலகக் கோப்பையின் நான்கு கட்டங்கள்:

லீக் சுற்று: பங்கேற்கும் 20 அணிகள் ஐந்து பேர் அடங்கிய நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் எட்டு: தகுதி பெறும் எட்டு அணிகள் நான்கு பேர் கொண்ட இரண்டு குழுக்களாக வைக்கப்படும். அவர்களின் தரவரிசையின் அடிப்படையில், ஒவ்வொரு சூப்பர் எட்டு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் நாக் அவுட் நிலைக்குச் செல்லும்.

நாக் அவுட் நிலை: அரையிறுதிப் போட்டிகள் மும்பை மற்றும் கொல்கத்தாவில் (அல்லது பாகிஸ்தான் அல்லது இலங்கை பங்கேற்றால் கொழும்புவில்) நடைபெறும். பாகிஸ்தான் முன்னேறாவிட்டால்,இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறும், இல்லையெனில் கொழும்புக்கு மாறும்.

முக்கிய தேதிகள்: இந்த நிகழ்வு பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8, 2026 அன்று இறுதிப் போட்டியுடன் முடிவடையும் 31 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தகுதி பெற்ற அணிகள்:

மொத்தம் 20 அணிகள் வெவ்வேறு முறையில் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியாவும் இலங்கையும் இணைந்து போட்டியை நடத்துவதால் முன்னுரிமையுடன் தகுதியைப் பெற்றன. 2024 டி20 உலகக் கோப்பையில் முதல் ஏழு இடங்களைப் பிடித்த அணிகள் (நடத்தும் நாடுகளைத் தவிர்த்து) ஐசிசி டி20 தரவரிசையில் அடுத்த மூன்று அதிக தரவரிசையில் உள்ள அணிகளுடன் சேர்ந்து தகுதி பெற்றன. இறுதி எட்டு இடங்கள் பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் நிரப்பப்பட்டன.

அணிகள் பின்வரும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

குழு A: இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா

பிரிவு B: ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே

குழு C: பங்களாதேஷ், இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், மேற்கிந்திய தீவுகள்

குழு D: ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்