SUV Highest Torque: 30 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் இந்தியாவில் கிடைக்கும், அதிக இழுவிசையை கொண்ட 7 எஸ்யுவி கார்கள்கின் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

எஸ்யுவி கார் - இழுவிசை திறன்:

இந்திய கார் சந்தையில் வழக்கமான கார்களை விட, எஸ்யுவி ரக கார்களுக்கான வரவேற்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் மோசமான சாலைகளிலும், ஏற்ற இறக்கங்களிலும் கூட எஸ்யுவி ரக கார்களால் பயணிக்க முடியும் என்பதே ஆகும். கரடுமுரடான சாலைகளிலும் எளிதில் பயணிக்கவும், பள்ளங்கள் மற்றும் மேடுகளில் பயணிப்பதும் ஒரு காரின் இழுவிசையை சார்ந்தே அமைகிறது. அந்த வகையில் இந்திய சந்தையில் 30 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், அதிக இழுவிசை திறன் கொண்ட கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மஹிந்திரா XUV700:

6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 2.2 எல் டீசல் இன்ஜினுடன், மஹிந்திரா XUV700 182 bhp மற்றும் 450 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த அபார திறமையால் இந்த SUV பட்டியலில் இடம்பெற்று உள்ளது. XUV700 இன் 2.2 லிட்டர் டீசல் ஆட்டோமேடிக் எடிஷன் பதிப்பின் ஆரம்ப விலை ரூ.18.59 லட்சம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ-என்

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் விற்பன செய்யப்படுகிறது. 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைந்த 2.2லிட்டர் டீசல் இன்ஜின் மிகவும் சக்திவாய்ந்த எடிஷனாக, 172 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.17.55 லட்சம்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்:

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் சரியான சக்தி மற்றும் முறுக்குவிசையின் கலவையை வழங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி, 134 bhp மற்றும் 395 Nm முறுக்குவிசை உற்பத்தி செய்ய, அதன் மின்சார மோட்டாரை இயக்கும் 39.2 kW பேட்டரி பேக் இந்த காரில் உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.23.84 லட்சம்.

டாடா ஹேரியர்:

டாடா ஹேரியர் என்பது டாடா மோட்டார்ஸின் மிட்சைஸ் SUV ஆகும். இது 167 bhp மற்றும் 350 Nm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 L டீசல் இன்ஜினுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.15.49 லட்சம்.

ஜீப் காம்பஸ்:

ஜீப் காம்பஸ் நம்பகமான ஆஃப்-ரோடு வரலாற்றைக் கொண்ட மிகவும் திறமையான SUV என்பதோடு, இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஜீப் மாடலும் ஆகும். தற்போது இது 167 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் 2.0 எல் டீசல் பவர்டிரெய்னுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.20.69 லட்சம்.

டாடா சஃபாரி:

டாடா சஃபாரி அதன் பிளாட்ஃபார்ம் மற்றும் பவர்டிரெய்னை ஹேரியருடன் பகிர்ந்து கொள்கிறது. டாடா மோட்டார்ஸ் இந்த எஸ்யூவியை ஒரு டீசல் இன்ஜின் விருப்பத்துடன் மட்டுமே வழங்குகிறது. 2.0லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் சஃபாரி 167 பிஎச்பி ஆற்றலையும் 350 என்எம் டார்க்கையும் கொண்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.16.19 லட்சம்.

எம்ஜி ஹெக்டர் & ஹெக்டர் பிளஸ்:

எம்ஜி மோட்டார் இந்தியா ஹெக்டர் & ஹெக்டர் பிளஸ் போன்றவற்றை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் சந்தையில் வழங்குகிறது. ஹெக்டரின் டீசல் பதிப்பு ரூ. 17.69 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது மற்றும் ஹெக்டர் பிளஸ் ரூ. 16.99 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த இரண்டு எஸ்யூவிகளும் 167 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் 2.0 எல் டீசல் இன்ஜினை கொண்டுள்ளது.