Suseenthiran: “பெரியார் பெயரை சொன்னாலே வருவேன்.. அவர் தான் ஹீரோ” - இயக்குநர் சுசீந்திரன் நெகிழ்ச்சி!

1 year ago 6
ARTICLE AD

பெரியார் மாதிரியான சிந்தனையுள்ள மனிதரை பார்க்க முடியாது என நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கி.வி.ஜெயஸ்ரீ எழுதிய “மூன்றாம் பிழக்கடை” என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் சுசீந்திரன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் இந்த மேடைக்கு வந்ததும் அப்பாவின் நியாபகம் தான் வந்தது. வெண்ணிலா கபடி குழுவின் கதையை சிறுவயதில் இருந்தே எனக்கு சொல்லி சொல்லி கபடிக்குள் இருக்கும் சாதி அரசியலை எனக்குள் புகுத்தினார். எங்க அப்பாவுடைய வாழ்க்கை தான் முதல் புத்தகம். அதைத்தான் நான் படமாக எடுத்தேன்.

கிராமத்தில் இருந்து சென்னை மாதிரியான ஊருக்கு நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தார். இந்த மாதிரியான ஒரு சமுதாய பின்னணியில் இருந்து வந்த ஜெயஸ்ரீக்கு பெரியாரின் கருத்துகளை ஊட்டி வளர்த்த அவரது தந்தைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு அவர் என்னை அழைத்ததும் நான் கண்டிப்பாக வருகிறேன் என சொன்னேன். காரணம் பெரியார் என்ற வார்த்தையை சொன்னால் நான் எங்கு கூப்பிட்டாலும் வருவேன். அடுத்த தலைமுறைக்கும் அவர் தான் ஹீரோ. அவர் மாதிரியான சிந்தனையுள்ள மனிதரை பார்க்க முடியாது. நான் விஜய் ஆண்டனி, சத்யராஜை வைத்து வள்ளி மயில் என்ற படம் எடுத்துள்ளேன். பெரியார் கருத்துகளை மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் அதில் பேசியிருக்கிறேன்.

நான் வெண்ணிலா கபடி குழு, அழகர் சாமியின் குதிரை போன்ற இலக்கியம் சார்ந்த படங்கள் பண்ணியதால் நிறைய புத்தகம் படிப்பேன் என நினைக்கிறார்கள். எனக்கு சின்ன வயதில் இருந்தே அந்த பழக்கம் இல்லை. படிப்புனாலே அலர்ஜி. நிறைய மனிதர்களுடன் பேசுவேன். அதன்மூலம் தான் ஜீவா, ஆதலால் காதல் செய்வீர் படம் எல்லாம் உருவானது. படிக்கும் பழக்கம் இப்போது குறைந்து விட்டது. வீடியோ பார்ப்பது அதிகரித்துள்ளதால் நம்முடைய கருத்தை அப்படி பதிவு செய்து வெளியிடலாம் என கேட்டுக் கொள்கிறேன்” என சுசீந்திரன் பேசினார்.

சுசீந்திரன் சினிமா பயணம்

வெண்ணிலா கபடி குழு, அழகர் சாமியின் குதிரை, பாண்டிய நாடு, நான் மகான் அல்ல, ஜீவா, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு,  ஜீனியஸ், சாம்பியன், கென்னடி கிளப், வெண்ணிலா கபடி குழு 2, குற்றம் குற்றமே என ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அடுத்ததாக வள்ளி மயில் என்ற படத்தை விஜய் ஆண்டனியை வைத்து இயக்கியிருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article