SUNDAY BANK WORKING DAY : ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து.! வங்கிகள் செயல்படும்- வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்

1 month ago 3
ARTICLE AD

வங்கிகள் 5 நாள் தொடர்ந்து செயல்படாது

வங்கிச் சேவைகள் மக்களின் அன்றாட தேவைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பணத்தை பாதுகாப்பாக சேமிப்பது முதல் பணப் பரிமாற்றம் வரை பல்வேறு சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன. இந்த நிலையில் வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் செயல்படாது என்ற அறிவிப்பு நாடு முழுவதும் மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என வார இறுதி நாட்கள் விடுமுறையாகவும், இதனை தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வங்கிகள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்

இதனால் 5 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாது என்ற காரணத்தால் மக்களின் அத்தியாவசிய பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அனைத்து வங்கிகளும் பணம் பரிவர்த்தனை தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தியை அனுப்பியது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) 2026 செப்டம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு முந்தைய செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய நாட்கள் வார இறுதி விடுமுறை நாட்களாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வங்கிச் சேவைத் தேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்

எனவே 27.09.2026 அன்று அனைத்து வங்கிக் கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம்-களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கிளைகள் மற்றும் பணப் பெட்டகங்கள் (Currency Chests) முழுமையாகச் செயல்படுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்களின் நலனும் வசதியும் அரசின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. முன்மொழியப்பட்ட வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்குமாறு தொழிற்சங்கங்களுக்கும் அரசும் வங்கி நிர்வாகங்களும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article