Stock Market: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!

1 year ago 7
ARTICLE AD

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 116.31 அல்லது 0.15% புள்ளிகள் உயர்ந்து 77,321.13 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 20.55 அல்லது 0.987% புள்ளிகள் உயர்ந்து 23,523.05 ஆக வர்த்தகத்தை தொடங்கியது.

சென்செக்ஸ்:

வாரத்தின் முதல் நாளில் வர்த்த நேரத்தில் காலை 11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 80 புள்ளிகள் குறைந்தது. பின்னர், சென்சென்ஸ் ஏற்றத்துடன் வர்த்தகமாகியது. இந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகலாம் என்று கணிக்கப்படுள்ளது. அப்படியிருக்க, சில் IPO பட்டியலிடப்படுவது பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.

ஜூன் 24-ல் இருந்து சந்தையில் சில நிறுவனங்கள் ஐ.பி.ஓ. அறிவிக்க உள்ளன. 11 நிறுவனங்கள் மொத்தமாக 10 பப்ளிக் இஷ்யூஸ் ரூ,1,991 கோடி மதிப்பில் ஐ.பி.ஓ. லிஸ்ட் ஆக இருக்கிறது.

ஐபிஓ என்றால் என்ன?

ஒரு தனியார் நிறுவனம் பொதுநிறுவனமாக மாற முடிவு செய்ததும், தனது பங்குகளை பங்குச்சந்தைகளுக்கு செல்வதற்கு முன்பு ​​பொது மக்களுக்கு ஐபிஓ மூலம் அதன் பங்குகளை வழங்குகிறது. ஐ.பி.ஓ.வில் பங்குகளை வாங்க ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் வாங்கலாம்.  ஐபிஓ ஒதுக்கீடு என்பது ஆரம்ப பொதுச் சலுகையின் போது (ஐபிஓ) பங்குகளுக்கு விண்ணப்பித்த முதலீட்டாளர்களுக்கு பங்குகளை ஒதுக்கும் நடைமுறையைக் குறிக்கிறது. IPO ஒதுக்கீடு நிலை மூலம், முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்க முடியும்.

Allied Blenders and Distillers

விஸ்கி உற்பத்தில் செய்யும் நிறுவனமாக Allied Blenders and Distiller ரூ.1,500 கோடி மதிப்பிலான ஐ.பி.ஓ. வழங்குகிறது. ரூ.267 - ரூ281 வரையில் ஒரு பங்கில் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27-ல் இதை சப்ஸ்க்ரைப் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Vraj Iron and Steel IPO

சத்தீஸ்கர் மாநிலத்தை தலைமையிடமான கொண்டு செயல்படும் டி.எம்.டி. உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ரூ.171 கோடி பப்ளிக் இஷ்யூ ஜூன் 26-ம் தேதி சப்ஸ்க்ரிப்சன் செய்ய விண்ணப்பிக்கலாம். இது ஜூன் 28-ம் தேதி முடிவடைகிறது. ரூ.195 - ரூ.207 ஒரு பங்கு விலையாக உள்ளது.

Shivalic Power Control

எலக்ட்ரி பேனல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.95- ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.64.32 லட்சம் ஈக்விட்டி பங்குகளை கொண்டுள்ள நிறுவனத்தில் ஜூன் 24-ம் தேதி முதல் பங்குகளை சப்ஸ்க்ரைப் செய்யலாம். 26-ம் தேதி நிறைவடைகிறது.

Sylvan Plyboard India

மரப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஐ.பி.ஓ. சப்ஸ்க்ரிபசன் இன்று முதல் ஜூன் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.  ஒரு பங்கில் விலை ரூ.28.05 ல் இருந்து ரூ. 55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Mason Infratech

ரியல் எஸ்கேட் நிறுவனம் இன்றுமுதல் வரும் ஜூன் 26 வரை ரூ.30.46 கோடி மதிப்பிலான ஐ.பி.ஓ. சப்ஸ்க்ரிபசன் வெளியிட உள்ளது. இதன் ஒரு பங்கின் விலை ரூ.62-62 ஆக உள்ளது.

Visaman Global Sales

ஸ்டீல் பைப், HR காய்ல்ஸ் விற்பனை செய்யும் நிறுவாந்த்தில் ஐ.பி.ஓ. வெளியீடு வரும் ஜூன் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு பங்கின் விலை ரூ.43 ஆக் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

EE Development Engineers and Akme Fintrade India ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஜூன் 26-ம் தேதி அவர்களின் பங்குகளை லிஸ்ட் செய்ய இருக்கிறது.

DDE நிறுவனத்தின் பங்குகள் 40 சதவீத ப்ரீயமித்தில் வர்த்தகமானது. Akme FIntrade நிறுவனம் 38 சதவீதம் ப்ரீயமத்தில் இருக்கிறது. SME சிறு குறு நிறுவனங்கள் பிரிவில் இன்னும் சில நிறுவனங்கள் லிஸ்ட் ஆக இருக்கிறது. GP Eco Solutions India இன்று லிஸ்ட் ஆக இருக்கிறது.  Falcon Technoprojects India, Durlax Top Surface, and GEM Enviro Management  ஆகிய நிறுவனங்கள்  வரும் 26-ம் தேதி லிஸ்ட் ஆக உள்ளது.

Read Entire Article