Special Buses: சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலை பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள்! முழு தகவல்

1 month ago 7
ARTICLE AD

சித்திரை மாதத்தின் முழு நிலவு நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையாரைத் தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம். வரும் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி இரவு தொடங்கி, மே 1-ம் தேதி இரவு வரை சித்ரா பௌர்ணமி புண்ணிய காலம் நிலவுகிறது. இந்த ஆன்மீகப் பயணத்தை பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு
பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்:

வரும் 30/04/2026 இரவு 09.50 மணி முதல் 01/05/2026 இரவு 11.07 மணி வரை (வெள்ளிகிழமை) சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 30/04/2026 முதல் திருவண்ணாமலைக்கும் 02/05/2026 மற்றும் வரை பல்வேறு சென்னையிலிருந்து இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் எத்தனை பேருந்துகள்?

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 30/04/2026 அன்று 548 பேருந்துகளும், 01/05/2026 அன்று 565 பேருந்துகளும் மற்றும் 02/05/2026 அன்று 35 பேருந்துகளும் சென்னை மாதவரத்திலிருந்து 30/04/2026 அன்று 186 பேருந்துகளும் 01/05/2026 அன்று 174 பேருந்துகளும் மற்றும் சென்னை அடையாரிலிருந்து 30/04/2026 அன்று 55 பேருந்துகளும் 01/05/2026 அன்று 50 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படும். ஆக, சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 30/04/2026 முதல் 02/05/206 வரை 11823 பேருந்துகள் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

குளிர்சாதன பேருந்துகள்:

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 01/05/2026 அன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகக் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்பதிவு வசதி:

மேலும், முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Read Entire Article