<p>இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவம்பர் 23-ம் தேதி சாங்லியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக ஸ்மிருதி மந்தனா தனது நண்பர்களோடு டான்ஸ் ஆடி திருமணத்தை அறிவித்தார். இதனை பார்த்தை ரசிகர்கள் பலரும் ஸ்மிருதி மந்தனாவிற்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். திருமண ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்று வந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் சங்கீத் நிகழ்ச்சியின் போது ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் அனுமதிக்கப்பட்டார். </p>
<p>இதனையடுத்து திருமணம் நிகழ்வும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் பலாஷ் முச்சலுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே திருமணம் மீண்டும் எப்போது நடைபெறும் என ஸ்மிருதி மந்தனாவின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் பரபரப்பு திருப்பமாக திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்மிருதி மந்தனா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இனி முழு கவனமும் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடி டிராபிகள் வெல்வதில் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.</p>
<p>ஆனால் திருமண ரத்து தொடர்பான காரணத்தை ஸ்மிருதி மந்தனா வெளியிடவில்லை. அதே நேரம் ஸ்மிருதி மந்தனாவை திருமணம் செய்ய இருந்த இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தான் திருமண நிறுத்தப்பட்டதற்கான காரணம் என கூறப்படுகிறது. அந்த வகையில் சமூகவலைதளங்களில் சில ஸ்கிரீன்ஷாட்கள் தீயாய் பரவத் தொடங்கியது. மேரி டி'கோஸ்டா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராமில் பலாஷ் முச்சலுடன் செய்த சாட்டிங்கை பகிர்ந்திருந்தார். அதில், அவரது அழகை வர்ணித்தும், அதிகாலை 5 மணிக்கு மும்பை வெர்சோவா கடற்கரைக்கு வரச் சொல்லி பலாஷ் முச்சல் சாட்டிங் செய்துள்ளதாக அந்த ஸ்கீரின் சாட்டில் உள்ளது.மேலும் ஸ்பாவிற்கு செல்லலாம், ஸ்விம்மிங் செல்லலாம் என்றும் பலாஷ் அழைப்பு விடுத்ததுபோல அந்த ஸ்கிரீன்ஷாட்டில் உள்ளது.</p>
<p>மேலும் "நீங்கள் ஸ்மிருதியை காதலிக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு சரியான முறையில் பதில் அளிக்காமல் பலாஷ் முச்சல்மழுப்பலான பதிலை அளித்ததாகவும் மேரி டி'கோஸ்டா தெரிவித்துள்ளார். gனவே இந்த புகார் காரணமாகவே திருமணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. இருந்த போதும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும், தன் மீதான ஆதாரமற்ற புகார் கூறப்பட்டுள்ளதாகவும், இதனை வதந்திகளை மக்களும் ரியாக்ட் செய்வது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். என் வாழ்நாளில் இது கடினமான நாள் என்றும் பலாஷ் முச்சல் தெரிவித்துள்ளார். </p>