Skoda Offers: 3.50 லட்சம் ரூபாய் வரை ஆஃபர்! தாறுமாறு தள்ளுபடி தந்த ஸ்கோடா - எந்தெந்த காருக்கு?

3 weeks ago 5
ARTICLE AD

இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று ஸ்கோடா. ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மாதாந்திர சலுகையை அறிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதன்படி, ஸ்கோடா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தனது கார்களுக்கு மே மாத தள்ளுபடி அறிவித்துள்ளது.

1. Kodiaq:

ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான கார் Kodiaq கார்.   இந்த காருக்கு மே மாத தள்ளுபடியாக ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 2 லட்சமும், எக்சேஞ்ச்/ கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 1.50 லட்சமும் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மே மாத தள்ளுபடியாக கோடியாக் காருக்கு ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 46.77 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 59.25 லட்சம் ஆகும்.

2. Kushaq Pre-Facelift:

ஸ்கோடாவின் Kushaq Pre-Facelift காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 2 லட்சமும், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 50 ஆயிரமும் அறிவித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் அறிவித்துள்ளனர்.

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.35 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 23.67 லட்சம் ஆகும். மொத்தம் 11 வேரிய்ணட் இந்த காரில் உள்ளது.

3. Slavia

இந்தாண்டு தயாரிக்கப்பட்ட Slavia காருக்கு ரொக்கமாக ரூபாய் 50 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 75 ஆயிரம் வரை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 1.25 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.75 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 22.15 லட்சம் ஆகும்.

4.Kushaq Facelift:

இந்த Kushaq Facelift காருக்கு ரொக்கத் தள்ளுபடி அளிக்கப்படவில்லை. ஆனால், அதற்கு பதிலாக எக்சேஞ்ச்/ கார்ப்பரேட் தள்ளுபடி அளித்துள்ளனர். அது 40 ஆயிரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்த தள்ளுபடியும் ரூபாய் 40 ஆயிரம் ஆகும்.

மொத்தம் 11 வேரியண்ட் கொண்ட இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.35 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 23.67 லட்சம் ஆகும்.

5. Kylaq :

நடப்பாண்டு தயாரிக்கப்பட்ட Kylaq காருக்கே தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கான ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 10 ஆயிரம் ஆகும். இந்த காரின் எக்சேஞ்ச்/ கார்ப்பரேட் தள்ளுபடி ரூபாய் 25 ஆயிரம் ஆகும். இந்த காருக்கான மொத்த தள்ளுபடி ரூபாய் 35 ஆயிரம் ஆகும்.

பட்ஜெட் விலையில் விற்பனையாகும் இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 9.07 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 16.19 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 13 வேரியண்ட்கள் உள்ளது.

Read Entire Article