Sivakarthikeyan SK24 Title: டான் இயக்குநர், எஸ்.ஜே.சூர்யாவுடன் சிவகார்த்திகேயன் மீண்டும் கூட்டணி: வெளியான படம் பெயர்!

1 year ago 7
ARTICLE AD

விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளையாக தன் திரைப் பயணத்தைத் தொடங்கி, இன்று தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், நடிப்பு, தயாரிப்பு, பாடல் என பன்முகத்திறமையெல்லாம் தாண்டி தன் அடுத்தக்கட்ட பாய்ச்சலை தமிழ் சினிமாவில் தற்போது நிகழ்த்தி வருகிறார்.

அடுத்தடுத்து படங்கள்

தற்போது சாய் பல்லவி ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள அமரன் திரைப்படம் இந்த ஆண்டு செப்டெம்பர் 27ஆம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ருக்மிணி ஜோடியாக நடிக்க இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

டான் கூட்டணி

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தான் நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி 100 கோடிகளை அள்ளிய டான் படத்தினை இயக்கிய சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதாக கடந்த சில நாள்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதாகவும், டான் படத்தினைப் போலவே எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

24வது படத் தலைப்பு

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 24வது படமான இப்படத்தின் தலைப்பு பற்றிய தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, இப்படத்துக்கு பாஸ் எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகவும், பேஷன் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article