சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை

தமிழின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது அமரன் , எஸ் கே 23 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் தனது முறை பெண்ணான ஆர்த்தியை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆராதனா மற்றும் குகன் தாஸ் என இரு குழந்தைகள் உள்ளார்கள். தற்போது சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே 2 ஆம் தேதி இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

#BlessedWithBabyBoy ❤️❤️❤️ pic.twitter.com/LMEQc28bFY

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 3, 2024