Siragadikka Aasai: மீண்டும் பெரிதாகும் ரூம் பிரச்சினை.. அண்ணாமலை கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசையில் இன்று!

1 year ago 6
ARTICLE AD

'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai ) சீரியல் இன்றைய எபிசோடில் “ரோகிணிக்கு தாலி செயின் வாங்கித் தர வேண்டும். மனோஜ் வாங்கித் தர வரைக்கும் அவ இப்படி இருக்க முடியுமா? நம்ம குடும்ப கௌரவம் என்ன ஆகும்?” என அண்ணாமலையிடம் சண்டை போடுகிறாள் விஜயா. "இத்தனை நாளா மீனா மஞ்சக்கயிறோடு தான் இருக்குறா. அப்போ உன்னோட கௌரவம் போகலையா? எல்லா மருமகளையும் ஒரே மாதிரி பார்க்க கத்துக்கோ" என அண்ணாமலை விஜயாவுக்கு அட்வைஸ் செய்கிறார்.

விஜயா ரோகிணியிடம் சென்று "இப்படி மஞ்சள் கயிறுடன் இருப்பதைப் பார்த்தா கஷ்டமாக இருக்கு. முத்துவும் மீனாவும் ஆசைப்பட்டது போலவே நடந்துடுச்சு. கீழ் வீட்டில அட்வான்ஸ் பணம் வாங்கி செயினை மீட்டலாம் வா" என சொல்கிறாள் விஜயா. "வேண்டாம் ஆண்ட்டி பணம் சம்பாதிச்சு வாங்கிக்கலாம்" என ரோகிணி சொல்ல "பரம்பரை பணக்காரங்க இப்படி தான் கௌரவமா இருப்பாங்க. சில பேர் இந்த வீட்ல இருந்து என்ன எடுத்துக்கிட்டு போகலாம் என தான் பாப்பாங்க" என விஜயா சொல்லிக்கொண்டு இருக்க அதை கேட்ட ஸ்ருதி மீனாவுக்கு சப்போர்ட் செய்து விஜயாவிடம் சண்டை போடுகிறாள்.

“ரோகிணி செயினை அடமானம் வைச்சதுக்கு மீனா எப்படி காரணமா இருப்பாங்க. முத்து அப்படி பண்ணதுக்கு மீனா என்ன செய்வாங்க. அம்மா தான் பணத்தை திருப்பி தர வேண்டாம் என சொல்லி இருக்காங்க" என ஸ்ருதி சொல்கிறாள். "பொருளையும் வாங்கிகிட்டு பணத்தையும் கொடுக்கலைன்னா நல்லா இருக்காது. நாங்க நியாயமா தொழில் செய்யணும் என ஆசைப்படுகிறோம். மனோஜ் எனக்கு வாங்கிக் கொடுப்பார் என எனக்கு நம்பிக்கை இருக்கு" என ரோகிணி சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

ரோகிணி அவளுடைய ப்ரெண்டிடம் நடந்ததைப் பற்றி சொல்கிறாள். “நான் இப்படி மஞ்சள் கயிறோடு கொஞ்ச நாட்களுக்கு இருப்பது தான் நல்லது. மனோஜுக்கு இப்ப என் மேல மரியாதை அதிகமாயிடுச்சு. இனிமே என்னை விட்டு கொடுக்காம இருப்பான். குடும்பத்துல இருப்பவர்களும் என் அப்பா பத்தி கொடையாம இருப்பாங்க" என்கிறாள் ரோகிணி.

மீனா பூ கட்டிக்கொண்டு இருக்கும்போது முத்து வந்து பேசிக்கொண்டு இருக்கிறான். அப்போது மீனாவுக்கு காய்ச்சல் அடிப்பதை தெரிந்து கொண்ட முத்து நான் போய் மருந்து வாங்கி வருகிறேன் என சொல்லி ரோகிணி ரூமில் படுக்க வைத்துவிட்டு செல்கிறான். அப்போது வீட்டுக்கு வந்தா மனோஜ் ரோகிணி, மீனா உள்ளே படுத்து இருப்பதை பார்த்து ஷாக்காகி விஜயாவிடம் சொல்லி பெரிய பிரச்சினை செய்கிறார்கள்.

அண்ணாமலை வந்ததும் "இதை என் இவ்வளவு பெரிய பிரச்சினை பண்றீங்க. அவள் அசதியா இருந்தா. அவளை எழுப்பாத. கொஞ்ச நேரம் அவ தூங்கட்டும்" என சொல்கிறார். ஆனால் அதைக் கேட்காமல் விஜயா போய் மீனாவை எழுப்பி அசிங்கப்படுத்தி பேசுகிறாள். அதை முத்து வெளியில் இருந்து கேட்டுவிடுகிறான். முத்துவை பார்த்ததும் விஜயா வாயை மூடி கொள்கிறாள். ரவியும் ஸ்ருதியும் கூட மீனாவுக்கு தான் சப்போர்ட் செய்கிறார்கள். மீனாவுக்கு காய்ச்சல் அதனால் தான் அவள் கொஞ்ச நேரம் படுத்துகொண்டாள் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.

"நாள் முழுக்க வேலை  செய்துவிட்டு வருகிறோம். வீட்டுக்கு வந்தா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க கூட முடியல. ஸ்ருதி அடுத்த வாரம் வெளியில படுக்கும்போது தான் தெரியும்" என ரோகிணி சொல்ல, "உங்களைப் போல சில்லியா நான் சண்டை போட்டுட்டு இருக்க மாட்டேன். ஒரு வாரம் நானும் ரவியும் எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவோம்" என சொன்னதும் விஜயா பதறுகிறாள்.

இதற்கு ஒரு முடிவு கட்டியே தீர வேண்டும். இன்னைக்கு விஜயாகூட ரோகிணியும், மீனாவும் படுத்துக்கட்டும். நானும் முத்துவும் மனோஜ் ரூமில் படுத்துக் கொள்கிறோம் என சொல்லிவிடுகிறார் அண்ணாமலை. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai ) எபிசோட் கதைக்களம்.

Read Entire Article