Siragadikka Aasai serial Aug 6 : விஜய் டிவியின் மிகவும் பிரபலமான தொடரான 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாவும் முத்துவும் க்ரிஷ் பற்றி வீட்டில் சொன்னதும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். க்ரிஷ் பற்றி கவலைப்பட்டு அண்ணாமலை பேச அதனால் தான் அப்பா நாங்கள் ஒரு முடிவு எடுத்து இருக்கோம் என முத்து சொல்கிறான்.

முத்து : க்ரிஷை நாங்க தத்து எடுத்து எங்க பிள்ளையா வளர்க்கலாம் என இருக்கோம்" என சொல்கிறான்.

அதை கேட்டு ரோகிணி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். விஜயா மனோஜை தவிர்த்து மற்ற அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் படியில் நின்று இதை எல்லாம் கேட்டு கொண்டு இருக்கும் ரோகிணிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

விஜயா : இது என்ன ஆசிரமமா? கண்டந்துங்களை எல்லாம் கூட்டிட்டு வந்து இங்க வளக்குறதுக்கு? ஏற்கனவே எனக்கு பிடிக்காத சிலதுங்க எல்லாம் இங்க இருக்குதுங்க

மீனா : என்னை தாங்க சொல்றாங்க

முத்து : என்னையும் சேர்த்து தான் மீனா சொல்றாங்க" என்கிறான்.

ரவியும் ஸ்ருதியின் இந்த முடிவுக்கு சப்போர்ட் செய்கிறார்கள். ஆனால் விஜயா முடியவே முடியாது என அடம் பிடிக்கிறாள்.

அண்ணாமலை : அவங்க நல்ல விஷயம் ஒன்றை முடிவு பண்ணி சொல்றாங்க. எடுத்த உடனே அதுக்கு ஏன் முட்டுக்கட்டை போடுற?

விஜயா : இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வர கூடாது. வேற எங்கயாச்சும் கூட்டிட்டு போய் வளர்த்துக்க சொல்லுங்க.

முத்து : தத்து எடுத்தா அவன் எங்களோட பையன். அவன் எங்க கூட தான் இருப்பான். எனக்கு யாரோட சம்மதமும் தேவையில்லை. அப்பாவும், க்ரிஷ் பாட்டியும் இதுக்கு சம்மதம் சொன்னால் அதுவே எனக்கு போதும்" என்கிறான்.

ரோகிணி வந்ததும் விஜயா அவளிடம் க்ரிஷ் பற்றி சொல்லி முத்து மீனா தத்து எடுக்க போவது பற்றி சொல்கிறாள்.

ரூமுக்கு போன ரோகினி அம்மாவுக்கு போன் செய்து இந்த விஷயத்தை சொல்லி திட்டுகிறாள். மீனாவும் முத்துவும் வீட்டுக்கு வந்தாலோ அல்லது போன் செய்தாலோ அவர்களை முகத்தில் அடித்தது போல பேசி அனுப்பிவிட சொல்கிறாள்.

அடுத்த நாள் இந்த விஷயம் பற்றி வித்யாவிடம் சொல்கிறாள் ரோகிணி.

ரோகிணி : அம்மாவையும் க்ரிஷையும் என்னுடைய கண் பார்வையிலேயே வைச்சுக்க போறேன். அப்போ தான் அவங்களை முத்துவும் மீனாவும் நெருங்க விடாமல் பார்த்துக்க முடியும்.

வித்யா : எத்தனை நாள் தான் இந்த உண்மையை உன்னோட வீட்ல மறைச்சு வைக்க முடியும்.

ரோகிணி : அதுக்கு தான் நான் ஒரு பிளான் வைச்சு இருக்கேன். உடனே நான் ஒரு குழந்தையை பெத்துக்கணும். அப்போ தான் மனோஜை என்னோட கண்ட்ரோலுக்கு கொண்டு வர முடியும். எனக்கு மத்தவங்க பத்தி கவலை இல்லை. மனோஜ் சம்மதம் தான் முக்கியம். சீக்கிரமா ஒரு டாக்டரை பார்த்து ஒரு வருஷம் ஆகியும் ஏன் இன்னும் நான் கன்சீவ் ஆகவில்லை என செக் பண்ணனும்" என்கிறாள்.

சீதா மீனாவுக்கு போன் செய்து அவள் ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ண விஷயத்தை சொல்லி மீனாவுக்கு நன்றி சொல்கிறாள். இந்த சந்தோஷமான செய்தி கேட்டு மீனா கண்கலங்குகிறாள்.

"மீனா : அப்பாவோட கனவை நீ நிறைவேத்திட்ட சீதா. நீ தான் நம்ம வீட்டோட முதல் பட்டதாரி " என சொல்லி சந்தோஷப்படுகிறாள்.

அப்போது அங்கே முத்து வர இந்த விஷயத்தை சீதாவை வைத்தே முத்துவிடம் சொல்ல சொல்கிறாள் மீனா. அதை கேட்டு முத்துவும் சந்தோஷப்படுகிறான். மீனாவையும் அழைத்து கொண்டு வீட்டுக்கு வருவதாக சொல்கிறான். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.