Siragadikka Aasai August 1 :கலர் கலரா ரீல் சுத்தும் ரோகிணி... அவளுக்கே ஆப்பு வைத்த விஜயா... முத்து மீது மீனாவுக்கு வந்த கோபம்

1 year ago 7
ARTICLE AD

Siragadikka Aasai  Serial August  1 :  விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா அவளுடைய ப்ரெண்ட்களிடம் கட்டிய பெட்டில் தோற்று போகிறாள். வேலை விஷயமாக முத்து பிஸியாக பேசிக்கொண்டே சாப்பிட்டு கிளம்பியதால் பெசரெட் தோசை எப்படி இருந்தது என சொல்லாமல் போனது பற்றி சொல்ல அவர்கள் அனைவரும் கிண்டல் செய்கிறார்கள். எல்லா ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் தான். கல்யாணம் முடிந்து ஒரு வருடம் முடிந்து விட்டால் அவ்வளவு தான் என சொல்கிறார்கள். மீனாவை விட்டு முத்துவுக்கு போன் செய்து காலை டிபன் எப்படி இருந்தது என கேட்க சொல்கிறார்கள். முத்து கார் ஒட்டி கொண்டு இருந்ததால் கடுப்பில் மீனாவை திட்டி போனை வைக்க சொல்கிறான். மீனாவுக்கு பெட் பணத்தை கொடுத்துவிட்டு கிளம்பிவிடுகிறாள்.

பார்வதி வீட்டுக்கு போன விஜயா கடுப்பில் பயங்கரமாக திட்டிக்கொண்டு இருக்கிறாள்.

"விஜயா : அந்த வீட்டில இருக்குறது சர்கஸ்ல இருக்குற மாதிரி இருக்கு. ஒருத்தரும் என்னை மதிக்குறது இல்ல. நீ இந்த வீட்ல தனியா இருக்க. நான் அந்த வீட்ல எல்லார் கூடவும் இருந்தாலும் தனியா இருக்கேன். நான் என்னோட காலில் நின்னா தான் எல்லாரும் என்னை மதிப்பாங்க.

பார்வதி: இந்த செல்போன் காரங்க இலவசமா சிம் கார்டு கொடுக்குற மாதிரி ஒரு மாசத்துக்கு இலவசமா பரதம் சொல்லி தாரேன் என சொல்லலாம். பசங்க போட்டுக்குற டான்ஸ் ட்ரெஸ்ஸை நாமளே கம்மி விலைக்கு வாங்கி அதை அதிக விலைக்கு அவங்களுக்கு கொடுக்கலாம். கிளாஸ் இலவசம் டிரஸ் மட்டும் தான் வாங்கணும் என சொல்லலாம்" என்கிறார். அதை கேட்டு விஜயாவுக்கு சந்தோஷமாகி விடுகிறது.

"விஜயா :நல்ல ஐடியா பார்வதி. இன்னிக்கே நல்ல நாள் தான். நாம போய் டிரஸ் வாங்கிட்டு வந்துடலாம்" என்கிறாள்.

ரோகினி க்ரிஷ் பிறந்தநாளுக்கு கோட் சூட் வாங்கிவதற்காக கடைக்கு போய் டிரஸ் ஒன்றை செலக்ட் செய்து க்ரிஷுக்கு வீடியோ கால் பண்ணி எந்த டிரஸ் நல்லா இருக்கா என கேட்கிறாள். அதற்கான பில் பணத்தை கட்ட போகிறாள்.

அதே நேரம் விஜயாவும் பார்வதியும் கடைக்கு டான்ஸ் டிரஸ் வாங்கிவிட்டு பில் போட வருகிறார்கள். ரோகிணியை கடையில் பார்த்து ஷாக்கான விஜயா என்ன விஷயம் என கேட்க விஜயாவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரோகிணி கிளைன்ட்டுக்காக வாங்க வந்தேன் என கதை விடுகிறாள். கடைக்காரர் வந்து பார்ஸலை கொடுத்து உங்க பையனுக்கு இந்த டிரஸ் ரொம்ப பிடிக்கும் என ரோகிணியிடம் சொன்னதும் விஜயா அந்த கடைக்காரரை பயங்கரமாக திட்டுகிறாள். டிரஸ் விலை 10 ஆயிரம் என தெரிந்ததும் அதற்கும் விஜயா கத்துகிறாள். எப்படியோ சொல்லி ரோகிணி சமாளித்து விடுகிறாள். விஜயாவிடம் இருந்து தப்பிப்பதற்காக நானே உங்க பில் பணத்தையும் கட்டி விடுறேன் என சொல்ல விஜயா சந்தோஷமாகிறாள். அப்படியே பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு போகலாம் என சொல்லி அதையும் ரோகிணி தலையில் கட்டி விடுகிறாள் விஜயா. இதையெல்லாம் பார்த்து கடுப்பாகிறாள் ரோகிணி.

வீட்டுக்கு வந்த முத்து, மீனாவுக்காக காஞ்சிபுரத்தில் இருந்து புடவை ஒன்று வாங்கி வந்து இருக்கிறான். மீனாவிடம் கொடுக்க அவள் அதை கண்டுகொள்ளவே இல்லை. எதுவுமே புரியாமல் முத்து குழப்பமாக பார்க்கிறான்.

"முத்து : புடவை நல்லா இருக்க இல்லையா. எதுவுமே சொல்லல?

மீனா : காலையில நான் செஞ்ச தோசை எப்படி இருக்குன்னு நீங்க சொன்னீங்களா? நான் உங்களால பெட்டுல தோத்து போயிட்டேன்.

முத்து : அது எப்படி மீனா எனக்கு தெரியும். நீ எது செய்தாலும் அது நல்லா தான் இருக்கும்" என சொல்லி அவளை சமாதானப்படுத்துகிறான்.

முத்து வாங்கி வந்த புடவையை மீனா காட்டிக்கொண்டு வந்து காட்டுகிறாள். இருவரும் சந்தோஷமாக போட்டோ எடுத்து கொள்கிறார்கள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை.

Read Entire Article