Shriya Saran: ஸ்ரேயா கேரியரை காலி செய்த ஒரு பாட்டு.. தானாக வந்து சிக்கிய கதை!

3 weeks ago 2
ARTICLE AD

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்த ஸ்ரேயாவின் கேரியரை ஒரு பாட்டு முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னணியைக் காணலாம்.

பொதுவாக சினிமாவில் எப்போது யாருக்கு உயர்வு வரும், வளர்ச்சி, புகழ்  ஆகியவை கிடைக்கும் என சொல்ல முடியாது. அதேசமயம் மிகப்பெரிய உச்சத்தில் இருப்பவர் கூட அடுத்த நொடி இறக்கத்தை நோக்கி செல்லும் அளவுக்கு கணிக்கமுடியாத துறையாக சினிமா உள்ளது. இந்த உலகில் எத்தனையோ பேரை இந்த இரண்டு பிரிவுகளில் நாம் பார்த்திருக்கலாம். அதில் மிக முக்கியமானவர் ஸ்ரேயா சரண்.

கொண்டாடிய தமிழ் சினிமா

2003ம் ஆண்டு தருண், த்ரிஷா நடிப்பில் வெளியான “எனக்கு 20 உனக்கு 18” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண்.  அதில் அவர் இரண்டாம் கதாநாயகியாக வந்திருப்பார். இதனைத் தொடர்ந்து 2005ம் ஆண்டு வெளியான மழை படத்தின் மூலம் ஹீரோயினாக அடியெடுத்து வைத்தார். அப்படத்தில் இடம் பெற்ற “நீ வரும்போது” பாடல் மிகப்பெரிய அளவில் அவருக்கு புகழைத் தேடி தந்தது. அதனைத் தொடர்ந்து திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி,ஜக்குபாய், உத்தமபுத்திரன், ரௌத்திரம், சிக்கு புக்கு ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

குறிப்பாக தனது 3வது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஹீரோயின் ஆனதை தமிழ் திரையுலகமே வியந்து பார்த்தது. ஆனால் அந்த புகழ் ஒரே ஒரு பாட்டின் மூலம் காணாமல் போனது தான் சோகக்கதை.

வடிவேலு படத்தில் இடம்பெற்ற ஸ்ரேயா

2008 ஆம் ஆண்டு நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்த படம் “இந்திரலோகத்தில் நா அழகப்பன்”. நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா இயக்கிய இப்படத்தை செவன்த் சேனல் மாணிக்க நாராயணன் மிக பிரமாண்டமான செலவில் தயாரித்திருந்தார். முன்னதாக வடிவேலு ஹீரோவாக அறிமுகமான இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. படம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி அடைந்தது.

இந்த படத்தில் தான் ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன், இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை எடிட்டிங் செய்து பார்த்தபோது காமெடி படம் என்ற அறிகுறியே இல்லாத அளவுக்கு காமெடி இல்லாமல் இருந்தது. எனக்கு படம் ஓடாது என தெரிந்து விட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அப்போது உச்சத்தில் இருந்த ஸ்ரேயாவை ஒரு பாடலுக்கு ஆட கேட்கிறேன். அவருக்கு தேதி பார்க்கும் மேனேஜர் சதீஷ் எனக்கு ரொம்ப நெருக்கம். அவர் எப்படியே எனக்காக இந்த படத்தில்  நடிக்க வேண்டும் என ஸ்ரேயாவை சம்மதிக்க வைக்கிறார்.

அப்போது ஸ்ரேயா கந்தசாமி படத்தில் நடித்து வந்தார். பலரும் வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் நடிக்க வேண்டாம் என அவரை எச்சரித்தார்கள். இமேஜ் போய்விடும் என பயமுறுத்தினார்கள். ஆனால் ஸ்ரேயா நான் நடிப்பதாக உறுதியளித்து பணம் வாங்கி விட்டேன். நான் டான்ஸ் ஆடி விட்டு தான் வருவேன்” என சொல்லிவிட்டார்” என தெரிவித்திருந்தார். அந்த ஒரு பாடம் ஸ்ரேயா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வலம் வர முடியாத காரணமாக மாறிவிட்டது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article