நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பயணித்த விமானமானது, கனமழையின் காரணமாக தரையிறங்க முடியாமல் , வானில் சில மணி நேரம் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்தில் சீமான்:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு, இண்டிகோ விமானம் மூலம் சென்றுள்ளார். அப்போது, மதுரை அருகே விமானமானது சென்றபோது, மழை மேகங்கள் சூழ்ந்திருந்திருக்கின்றன. இதனால், உடனடியாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், சிறிது நேரம் வானில் வட்டமடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

Also Read: எண்ட்ரி தரும் புதிய காற்றழுத்தம்.! துல்லியமாக ஏன் கணிக்க முடியவில்லை? எங்கெல்லாம் ரெட் அலர்ட்.!

வானிலை நிலவரம்:

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு, எந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பார்ப்போம்.

இன்று மழை பெறும் மாவட்டங்கள்:

தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

13-12-2024:

தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

13.12.2024:

தென்தமிழகத்தில் அநேக இடங்களில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி,கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம். சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.