ஒரு பிரச்னைஎன்றால் என்னை அழைக்கிறார்கள். ஆனால் ஓட்டை திமுக, அதிமுகவுக்கு போட்டு விடுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தவிர்க்க முடியாத கட்சியாக நாம் தமிழர்

வேடசந்தூர் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், “ஒன்றும் இல்லாத என்னை 3வது பெரிய கட்சியாக மக்கள் மாற்றினீர்கள். என் கட்சியின் சின்னம் ஓட்டு மிஷினில் எந்த பக்கம் இருக்குன்னு தெரியாது. ஆனால் இன்றைக்கு முதல் பக்கம் இருக்கிறது. காரைக்குடியில் எனக்கு இரண்டாவது இடமும், வேடசந்தூரில் 1வது இடமும் வழங்கப்பட்டிருக்கிறது. என் மக்களால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

என்னை வளர்த்து தமிழ்நாட்டில் தனித்து அங்கீகாரம் பெற்ற மாநில கட்சியாக உயர்த்தி என்னை தவிர்க்கவே முடியாத ஒருவராக மாற்றியிருக்கிறார்கள். எனக்கு ஒவ்வொரு தேர்தலில் ஒரு சின்னம் கொடுத்தார்கள். இப்போது என்னைப் போன்ற விவசாயியை சின்னமாக வழங்கி விட்டார்கள். நான் முதலில் போய் சின்னம் கேட்கும்போது புலி கேட்டேன். பின்னர் மயில் கேட்டேன். அது தேசிய விலங்கு, தேசிய பறவை என சொல்லி முடியாது என சொன்னார்கள்.

பின்னர் ஏன் தேசிய மலர் தாமரையை பாஜகவுக்கு கொடுத்தீர்கள் என கேட்டேன். அது அந்த காலக்கட்டத்தில் நடந்தது என தலையை சொறிந்துக் கொண்டே அதிகாரிகள் தெரிவித்தனர். காளை மாடு கேட்டேன். உயிருள்ள பொருளை தரமாட்டேன் என கூறினார்கள். வீட்டுக்கு வந்ததும் விவசாயி கொடுத்தார்கள். ஏனென்றால் எந்த விவசாயி உயிரோடு இருக்கிறார்கள், அதனால் கொடுத்து விட்டார்கள். அதை ஏன் எனக்கு கொடுத்தார்கள் என கேட்டால், நான் விவசாயியை காப்பாத்தி விடுவேன் என்பதால் தான் கொடுத்தார்கள்.

என் உருவத்தில் நாதக சின்னம்

இப்போது நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றதால் நான் கேட்கும் சின்னத்தை எனக்கு கொடுக்க வேண்டும். அதனால் மீண்டும் விவசாயி வேண்டும் என கேட்டேன். எப்படி வேண்டும் என கேட்டு வரைந்து கொடுக்க சொன்னார்கள். ஒரு 10 வகையில் வரைந்து கொடுத்தேன். இதை தேர்வு செய்து விட்டார்கள். இந்த சின்னத்தில் இருக்கும் விவசாயிக்கு என்னை ரோல் மாடலாக வைத்து வரைந்து விட்டார்கள். அதை ஓகே செய்த தேர்தல் ஆணைய அதிகாரிக்கு அது சீமான்னு தெரியாமல் இருந்தது.

இறைமகன் இயேசு உலக மக்களின் பாவத்தைப் போக்க சிலுவையை சுமந்தார். உன் மகனான நான் இந்த கலப்பையை சுமக்கிறேன், ஏன் தெரியுமா, என் மக்களின் பசியைப் போக்க, இரண்டு ஒன்று தான். நீங்களும் தான் 60 ஆண்டுகளில் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட்டு விட்டீர்கள். கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என பலரும் ஆண்டு விட்டார்கள். மீண்டும் ஆள துடிக்கிறார்கள்.

மக்களாகிய நீங்கள் 500,1000 வாங்கி விட்டு திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட்டு விட்டு பின் எதுவும் சரியில்லை என புலம்புகிறீர்கள். ஒரு பிரச்னை என்றால் என்னை அழைக்கிறார்கள். ஆனால் ஓட்டை திமுக, அதிமுகவுக்கு போட்டு விடுகிறார்கள். என்னை தூக்கி ரோட்டில் போட்டு விடுகிறார்கள். நான் சபிக்கப்பட்டவன். என் இனம் ஒரு சாபத்தை வாங்கி வந்து விட்டது” என சீமான் தெரிவித்துள்ளார்.