Seeman: ”15 வருஷமா ஒன் சைடு லவ்... புரிஞ்சிக்க மாட்டா..” ஃபிலிங்காக பேசிய சீமான்

6 hours ago 1
ARTICLE AD

நான் ரொம்ப நாளா ஒன் சைடு லவ் பண்ணிட்டு இருக்கேன்,என் காதல் புரிஞ்சிருச்சுனா, நான் வென்றிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உணர்ச்சி போங்க பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் சூறவாளி பிரச்சாரம் மேற்க்கொண்டனர். அந்த வகையில் காரைக்குடியில் போட்டியிடும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பிரசாரம் மேற்க்கொண்டார்.

ஒன் சைடு லவ்

அப்போது  சீமான் பேசியதாவது: நீ இப்பதான் காதலிக்கிறாய், நான் 15 ஆண்டு காலமாக காதலித்து கத்தி கொண்டு இருக்கிறேன். என் காதல் புரிஞ்சிருச்சுனா, நான் வென்றிடுவேன். நான் ரொம்ப நாளா ஒன் சைடு லவ்லயே போயிட்டு இருக்கேன். அவன் ரூ.2 ஆயிரம் கொடுக்கிறான். நான் ஒரு வீட்டிற்கு ஹெலிகாப்டர் கொடுக்கிறேன் என சொல்கிறேன். நம்பாமல் சிரிக்கிறான். அவன் சொன்னால் நம்புகிறான், நான் சொன்னால் சிரிக்கிறான். அண்ணன் சும்மா சொல்கிறார் என்கிறான்.

அரசாங்க வேலை கொடுக்கிறேன்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ தங்கம், புதிதாக திருமணமான பெண்களுக்கு ஒரு கிலோ வைரமும் விரும்பிய நாட்டிற்கு தேன்நிலவு பயணம் செல்லவும் ஏற்பாடு செய்யப்படும். வேறு ஏதாவது வேண்டுமா?ஹெலிகாப்டரை மொட்டை மாடியில் போட்டுக் கொடுத்து விடுகிறேன்.  உடன் பிறந்தவர்களை இனி திருந்தி தொலையுங்கள். ரத்தம் கொதிக்கிறது, மாறுங்கள். நாம் எதற்கு ஆயிரம் ரூபாய், இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வேண்டும். வீட்டிற்கு ஒன்று, இரண்டு பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை கொடுக்கிறேன்.

ஒரு வட இந்தியன் தேவை இங்கு இருக்காது. வந்த வழியிலேயே தொடர் வண்டியில் ஏறி போய்விடுவான். என் பிள்ளைகளுக்கு படிப்பிற்கு ஏற்ற பயிற்சி கொடுத்து, திறன் மேம்பாடு கொண்டு வருவேன். வந்த உடனே டாஸ்மாக்கிற்கு பெரிய பூட்டாக போட்டு மூடிவிட்டு, இனிமேல் சரக்கு காய்ச்சப்பட மாட்டாது.
சரக்குகள் எடுத்து விற்கப்பட மாட்டாது. கடைகளில் இருக்கும் சரக்குகளை மதுப்பிரியர்கள் எடுத்து குடித்துக் கொள்ளுங்கள். எதற்கென்றால் அதன் பிறகு சரக்கு வராது. உழைத்து களைத்து வந்தவர்களுக்கு பனம்பால், தென்னம்பால் இருக்கிறது. திறந்து விடுகிறேன் நல்லா குடித்துக்கொள் என  சீமான் பேசினார்.

Read Entire Article