School Leave: இடைவிடமால் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!

2 hours ago 1
ARTICLE AD

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அர்னாப் புயலை அடுத்து வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு புயல் தீவிர புயலாக நேற்று வலுப்பெற்றது. இந்த புயல் ஆந்திராவின் நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே ஒங்கோலுக்கு அருகே அதிகாலை 3.30 முதல் 5.30 மணிக்குள்ளாக கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது 120 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

கரையை கடந்த முரசு புயல்

இதன் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. ஆனால் புதுச்சேரியில் நள்ளிரவில் இருந்து தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடலூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read Entire Article