School Holiday: ஆடிப்பெருக்கு திருவிழா... பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

1 year ago 7
ARTICLE AD

Aadi Perukku 2024: ஆடி மாதம் வந்தாலே கோயில்கள் களைகட்டி காணப்படும். மாதம் முழுவதும் ஆன்மீக மணம் கொண்ட மாதமாக திகழ்வது ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்திலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஆடிப்பெருக்கும் ஒன்றாகும். நடப்பாண்டிற்கான ஆடிப்பெருக்கு நாளை  கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு தற்போது முதலே களைகட்டி வருகிறது.

பள்ளி விடுமுறை:-

ஆடிப்பெருக்கு நாளில் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு சென்று நீராடி தங்களது இஷ்ட தெய்வங்களை வழிபடுவது வழக்கம். குறிப்பாக ஆற்று படுகை, கடலோரம் உள்ள மக்கள் இந்த ஆடிப்பெருக்கை மிக சிறப்பாக கொண்டாடுவார்கள். இதனையொட்டி பொதுமக்கள் நலன்கருதி புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆடி 18 ஏன் சிறப்பு?

ஆடி மாதம் என்பது விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை தொடங்கும் மாதம் ஆகும். தமிழ்நாட்டின் பிரதான விவசாயத்திற்கு மூலாதாரமாக காவிரி உள்ளது. மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து பொங்கி ஓடும் காவிரி ஆறு காவிரி கடைமடை வரை சென்றடைவதற்கு குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

இதன்காரணமாக ஆடி மாதம் 18ம் தேதி காவிரித் தாயை வணங்கி அன்றைய நாளில் புனித நீராடி, பூஜை செய்வது வழக்கம். இந்த நாளே ஆடிப்பெருக்காகவும் கொண்டாடப்படுகிறது. தற்போதும் டெல்டா மாவட்டங்களில் ஆடி மாதத்தில் குறுவை சாகுபடி தொடங்குகிறது. ஆடிப்பெருக்கு நன்னாளில் புதுமணத் தம்பதிகள் தாலிப்பிரித்து கோர்த்தல், சுபகாரியங்களை தொடங்குவது, புதிய பொருட்களை வாங்குவது உள்ளிட்ட பலவற்றை தொடங்குவார்கள்.

சுமங்கலி பெண்கள் காவிரி அன்னையை வழிபட்டு தாலிக் கயிறை மாற்றிக்கொள்வது வழக்கம். குறிப்பாக, புதுப்பெண்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, தன்னுடைய கணவனின் கையால் கட்டிக்கொள்வார்கள். இதன் மூலம் மாங்கல்ய பலம் நீடிக்கும், நிலைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

தாலிக்கயிறு மாற்றிக் கொள்பவர்கள் பகல் 12 மணிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். இறங்கு பொழுதில் தாலி மாற்றிக் கொள்ளக் கூடாது. இறங்குபொழுதில் நல்ல நேரம் இருந்தாலும் தாலி கயிறு மாற்றுவதை தவிர்ப்பது நல்லது.

தாலிக்கயிறு மாற்ற நல்ல நேரம் :

காலை 07.35 முதல் 08.50 வரை

காலை 10.35 முதல் 11.55 வரை

Read Entire Article