<p><strong>Rajasthan School Building Collapse:</strong> ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடிபாடுகளில் மாணவர்கள் உள்ளிட்ட மேலும் 40 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரசுப் பள்ளியில் காலை சுமார் 8.30 மணியளவில் இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது.</p>