நாடு முழுவதும் 13,735 ஜூனியர் அசோசியேட் பதவிகளை நிரப்ப நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாக உள்ளது. இதை டவுன்லோடு செய்வது எப்படி என்று காணலாம்.

கஸ்டமர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ் பிரிவில் எஸ்பிஐ கிளர்க் பணியிடங்கள் காலியாக உள்ளன. 13,735 ஜூனியர் அசோசியேட் பதவிகள், இந்தத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 22, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் மார்ச் 1ஆம் தேதியும் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று எஸ்பிஐ அறிவுறுத்தி உள்ளது.

தேர்வு எப்படி?

100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரத்துக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது.

வினாத்தாள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஆங்கிலம், எண் திறன் மற்றும் பகுத்தறியும் திறன் என வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. ¼ அதாவது 0.25 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும்.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

தேர்வர்கள் https://sbi.co.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

அதில், careers போர்ட்டல் பகுதிக்குச் செல்லவும்.

அதில் உள்ள current openings என்னும் பக்கத்துக்குச் சென்று, Junior Associate பிரிவைத் தேர்வு செய்யவும்.

அதில் முதல்நிலைத் தேர்வுக்கான அழைப்பு பக்கத்தை க்ளிக் செய்யவும்.

அதில் லாகின் விவரங்களை உள்ளிடவும்.

விவரங்களை உள்ளிட்டு, ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்யவும்.

வேலைவாய்ப்பு குறித்த பிற கூடுதல் விவரங்களுக்கு: https://sbi.co.in/web/careers என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.