தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 10ம் தேதி ரிலீசானது.

படுதோல்வி அடைந்த சர்தார் 2:

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் சூரியின் மண்டாடி படத்திற்கு போட்டியாக ரிலீசானது. படம் வெளியான முதல் நாளே எதிர்மறை விமர்சனங்கள் குவிந்ததால் படத்தின் வசூலை அது பெரியளவில் பாதித்தது. மேலும், மண்டாடி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் சர்தாரைக் காட்டிலும் மண்டாடியின் திரையரங்கு அதிகரித்து வருகிறது.

20 கோடியை கூட எட்டாத சர்தார் 2:

சர்தார் 2 படம் படம் வெளியாகி கடந்த இந்திய அளவில் வெறும் ரூபாய் 13 கோடி மட்டுமே வசூலைக் குவித்துள்ளது. உலகளவில் ரூபாய் 20 கோடி வசூலையே இதுவரை தாண்டவில்லை. தற்போது வரை சர்தார் 2 படம் நேற்று வரை ரூபாய் 19.85 கோடி வசூல் மட்டுமே குவித்துள்ளது. இன்றும் படத்திற்கு பெரியளவு வரவேற்பு கிடைக்கவில்லை. நாளுக்கு நாள் வசூல் சரிந்து வரும் நிலையில், நேற்று ரூபாய் 1.50 கோடி மட்டுமே வசூலை சர்தார் 2 குவித்தது.

சுமார் ரூபாய் 130 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 20 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலைக் குவித்திருப்பது படக்குழு மத்தியில் கவலையை உண்டாக்கியுள்ளது. படத்தின் பிற்பாதியில் திரைக்கதையில் தொய்வு இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். சர்தார் 2 படத்தில் கார்த்தியுடன் எஸ்ஜே சூர்யா, மாளவிகா மோகனன், அஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.

மாஸ் காட்டும் மண்டாடி:

சர்தார் 2 படத்திற்கு போட்டியாக வெளியான மண்டாடி படம் ரூபாய் 63 காேடி வசூலைக் குவித்துள்ளது. ரூபாய் 75 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் விரைவில் ரூபாய் 100 கோடி வசூலைக் குவிக்கும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது.

முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ். மித்ரனே இந்த படத்தையும் இயக்கியுள்ளார். படத்தின் கதையை பி.எஸ்.மித்ரன், ரத்னகுமார், ஆஷாமீரா ஐயப்பன், விக்னேஷ் முனியாண்டி எழுதியுள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே உருவான இந்த படத்தில் முனீஸ்காந்த், நாசர், ஆஷிஷ் வித்யார்த்தி, நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல் என பலரும் நடித்துள்ளனர். கார்த்தி இதற்கு முன்பு வெளியான வா வாத்தியார் படமும் படுதோல்வி அடைந்த நிலையில், இந்த படமும் தோல்வி அடைந்தது ரசிகர்கள் மத்தியில் வேதனையை உண்டாக்கியுள்ளது. கார்த்தி நடிப்பில் தற்போது மார்ஷல் படம் உருவாகி வருகிறது.