Sanju Samson: ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன்? சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

1 year ago 7
ARTICLE AD

இந்திய அணி:

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை வென்றது. ஆனால் ரோஹித் ஷர்மா தலைமையிலான ஒரு நாள் அணி ஒரு நாள் போட்டிகளில் தோல்வி அடைந்தது. முன்னதாக இலங்கைக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.

சஞ்சு சாம்சன் பதில்:

இந்நிலையில் ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்படாதது குறித்து சஞ்சு சாம்சன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "இந்திய அணிக்காக விளையாட எப்போது என்னை தேர்வு செய்கிறார்களோ, அப்போது நிச்சயம் விளையாடுவேன். அவ்வளவு தான். கடைசியில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடுவது தான் தேவையான விஷயம்.

எப்போதும் ஒன்றை தேர்வு செய்கிறோம் என்றால், அதன் தேவையை தான் பார்க்க வேண்டும். நானும் அப்படியான மனிதர் தான். அதனால் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. அடுத்த இலக்கை நோக்கி நாம் பணியாற்ற வேண்டும். கவுதம் கம்பீருக்கு கீழ் இந்திய அணியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது" என்று கூறியுள்ளார் சஞ்சு சாம்சன்.

மேலும் படிக்க: Paris Olympics 2024: நாடு திரும்பிய தங்கமகன் அர்ஷத் நதீம்..பாகிஸ்தான் அரசு அறிவித்த உயரிய விருது!

மேலும் படிக்க: Watch Video: நீ என் செல்லம் டா... பாரீஸ் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை நாய்க்கு பரிசளித்த அமெரிக்க வீரர்!

Read Entire Article