Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்

1 month ago 4
ARTICLE AD

2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக  சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தத் தொடரின் பாதியில் தான் வாய்ப்பு கிடைத்தாலும் அதிரடி காட்டியதுடன், இறுதிப்போட்டியில் 89 ரன்கள் குவித்து 'தொடர் நாயகன்'  விருது வென்ற சஞ்சு சாம்சன், வெற்றிக்குப் பிறகு தனது நெடிய போராட்டத்தைப் பற்றி உருக்கமாகப் பேசினார்.

இது ஒரு கனவு..

தனது வெற்றி குறித்துப் பேசிய சஞ்சு, "இது ஒரு கனவு போல இருக்கிறது. இந்தக் கனவைக் காண்பதற்கான துணிச்சல் என்னிடம் இருந்தது. எனது நாட்டிற்காக இந்த வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருந்தது. இந்திய கிரிக்கெட் இன்று இருக்கும் இந்த உன்னத நிலைக்கு என்னால் முடிந்த பங்களிப்பை வழங்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும், ஆசிர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்கிறேன்," என்றார்.

பின்னடைவுகளே படிக்கட்டுகள்

தனது கிரிக்கெட் பயணத்தில் சந்தித்த சவால்கள் குறித்து அவர் கூறுகையில்: "சிறுவயதிலிருந்தே எந்தவொரு சூழ்நிலையையும் நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்க்க நான் பயிற்சி பெற்றுள்ளேன். நான் சந்தித்த அனைத்து வலிகளும், ஏமாற்றங்களும், பின்னடைவுகளும் என்னை இன்னும் வலிமையானவனாக மாற்றியுள்ளன என்று நான் பொதுவாக உணர்கிறேன். இன்று நான் எதைச் செய்திருக்கிறேனோ, அதற்கு அந்த வலிகள் மட்டுமே காரணம்."

ஏமாற்றங்களை நேர்மறையாக மாற்றுங்கள்

"வாழ்க்கையிலும் சரி, தொழில் வாழ்க்கையிலும் சரி, நாம் சந்திக்கும் தோல்விகளையும் பின்னடைவுகளையும் நேர்மறையாகப் பயன்படுத்தினால், அவை உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய பலமாக மாறும். அதுதான் என் விஷயத்திலும் நடந்தது. இதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்று சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

#WATCH | Thiruvananthapuram, Kerala: On India's ICCT20WorldCup2026 win, Indian cricketer Sanju Samson says, "It was like a dream... I was courageous enough to have this dream... I want to win it for my country. I want to contribute in such a way that it becomes what it is now. I… pic.twitter.com/FM4iD6XEEK
— ANI (@ANI) March 9, 2026

சாதனைப் பயணம்:

2024 உலகக்கோப்பையில் அணியில் இருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாத சஞ்சு, இந்த 2026 உலகக்கோப்பையில் தொடரின் நாயகனாக உருவெடுத்துள்ளார். இறுதிப்போட்டியில் 46 பந்துகளில் 89 ரன்கள், அரையிறுதியில் (இங்கிலாந்துக்கு எதிராக) 42 பந்துகளில் 89 ரன்கள், சூப்பர் 8 (மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக): ஆட்டமிழக்காமல் 97 ரன்கள்.

ஒரு காலத்தில் அணியில் இடம் கிடைக்காமல் தவித்த சஞ்சு சாம்சன், இன்று உலகக்கோப்பை நாயகனாக ஜொலிப்பது, "விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி" என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

Read Entire Article