Sam Konstas : அந்த பையனுக்கு பயம் இல்ல! இந்தியாவுக்கு எதிராகவே சதம்.. யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?

1 year ago 7
ARTICLE AD

இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.

நீக்கப்பட்ட மெக்ஸ்வீனி:

இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று (டிசம்பர் 20) அறிவித்தது. இதில் மூன்று டெஸ்டு போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார் நாதன் மெக்ஸ்வீனி. ஆனால்  எதிர்ப்பார்த்த அளவுக்கு அவர் ரன்கள் அடிக்கவில்லை. முதல் மூன்று போட்டிகளையும் சேர்த்து அவர் மொத்தம் 72 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் அவர்  நான்காவது டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையும் படிங்க: Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி

அவருக்குப் பதிலாக,  நியூ சவுத் வேல்ஸை சேர்ந்த  சாம் கான்ஸ்டாஸ் அணியில் சேர்க்கபட்டுள்ளார்.  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்கவுள்ள பாக்சிங் டே டெஸ்டில்  கவாஜாவுடன் இணைந்து உஸ்மான் கவாஜா இணைந்து ஓப்பனிங் செய்வார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?

19 வயதான சாம் கான்ஸ்டாஸ் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். 11 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள கான்ஸ்டாஸ் 2 சதம், 3 அரைசதங்களுடன் 718 ரன்கள் குவித்துள்ளார். இறுதியாக சிட்னியில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த முதல் தர போட்டியில்  அவர் 145 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 88 ரன்கள் எடுத்தார்.

பயிற்சி போட்டியில் சதம்:

இதற்கிடையில் கான்பெராவில் உள்ள மனுகா ஓவலில் இந்தியாவுக்கு எதிராக பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்காக பிங்க்-பால் பயிற்சி ஆட்டம் நடைப்பெற்றது. இந்த ஆட்டத்தில் கோன்ஸ்டாஸ் அதிரடியாக  விளையாடி சதமடித்தார், அவர்  97 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் நெருக்கடியான கட்டத்தில் இறங்கி சதமடித்தது ஆஸ்திரேலிய தேர்வு குழுவினர்களை தன் பக்கம் திருப்பி அணிக்குள் நுழைந்துள்ளார்.

இதையும் படிங்க: KL Rahul : பாக்சிங் டே டெஸ்ட்டின் பாட்ஷா! ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கே.எல் ராகுல்?

டேவிட் வார்னர் ஓய்வு பெற்ற பிறகு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் சொல்லிக்கொள்ளும் படி இல்லை, இதனால் தான் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் நாதன் மெக்ஸ்வீனி அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் அவர் 6 இன்னிங்ஸ்களில் 4 முறை பும்ராவிடம் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதன் காரணமாகவே சாம் கோன்ஸ்டாஸ் பக்கம் ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் திரும்பியுள்ளனர்.

பிக் பாஷ் தொடரில் அரைசதம்:

பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக கான்ஸ்டாஸ்  களம் இறங்கி தனது முதல்  BBL போட்டியில் 27 பந்துகளில் அரை சதம் அடித்தார்.  சிட்னி தண்டர் அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்கிற சாதனையும் படைத்தார்.

Read Entire Article