சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு மண்டல பூஜைகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் நடை அடைக்கப்பட்டது. மாசி மாத பூஜைகள் இன்று தொடங்கிய நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற திருத்தலமாக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கேரளத்தில் இருந்து மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, வடமாநிலங்கள் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை மாதத்தில் வரும் மண்டல கால பூஜை, மகரவிளக்கு பூஜை காலத்தின்போது லட்சக்கணக்கிலான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் சாமி கோவிலில் மண்டலகால பூஜைகள் கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கின. இதையொட்டி, நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பொதுவாக மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின்போது சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருப்பது வழக்கம்.

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?

சபரிமலை சீசனின்போது கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்ததால் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த மண்டல காலத்தில் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஐயப்பனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் மகரஜோதி தரிசனம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாசி மாதாந்திர பூஜையையொட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி நடை திறக்கப்படம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 12 முதல் பிப்வரி 17 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் இந்த நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் sabrimalaonline.org என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!

இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி அருண்குமாா் நம்பூதிரி அவர்களால் திறக்கப்பட்டது. நேற்று பூஜைகள் எதுவும் நடைபெறாத நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹேமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளும் நடைபெற்றது. இரவில் படி பூஜையும் நடைபெறும். மாசி மாத பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 5 நாள்கள் அதாவது பிப்ரவரி 17 ஆம் தேதி வரை திறந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.