'S.I.R - நெருப்பாய் பணியாற்றும் திமுகவினர் ! தமிழக அரசியல் களத்தில் நடப்பது என்ன ? பரபரப்பு தகவல்!

4 weeks ago 2
ARTICLE AD

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி கடந்த நான்காம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தும் இந்த விவகாரத்தில், திமுக கண்ணும் கருத்துமாக வேலை செய்து வருவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிக்காக, அதற்கான விண்ணப்பங்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் முகவர்கள் வாயிலாக வீடு தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வாக்காளர் விண்ணப்ப படிவம் விநியோகம், படிவம் பூர்த்தி செய்தல், போன்ற பணிகளில் ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு உதவ அனைத்து கட்சிகளிலும் ஓட்டு சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் ஓட்டுச்சாவடி முகவர்கள், வாக்காளர் திருத்தப் பணிகளை கவனித்து வருகின்றனர்.

களத்தில் இறங்கி வேலை செய்யும் திமுக

வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக, பல தொகுதிகளில் அதிமுகவினர் ஆர்வமுடன் வேலை செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுகவோ தீயாக வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி மேற்கொள்வதற்காக, திமுகவில் அமைச்சர்கள் உள்ளிட்ட 8 பேர் 8 மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மண்டல பொறுப்பாளர்கள் மேற்பார்வையில், மாவட்டச் செயலாளர்கள் தொகுதி பார்வையாளர்களுக்கு சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக இது குறித்து ஒன்றியம், நகரம், பேரூர், கிளை நிர்வாகிகள் வரை வழக்கறிஞர் குழு மூலமாக ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உதவி மையம்

இதுபோக சென்னை அறிவாலயத்தில் வாக்காளர்களுக்கு உதவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்பு கொண்டு சந்தேகங்கள் கேட்பவருக்கும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் திமுக இதை எதிர்த்து வந்தாலும், நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு படிவத்தை நிரப்புவதற்கான உதவிகளையும் திமுக பூத் ஏஜெண்டுகள் உதவி செய்து வருகின்றனர்.

தேர்தல் சமயத்தில் எப்படி வேலை செய்வார்களோ அதே போன்று திமுகவினர் வேலை செய்து வருவது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிமுகவும் இதே வேலைகளை செய்தாலும், பெரும்பாலான இடங்களில் திமுகவைப்பேல் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article