<p><strong>Rohit Sharma:</strong> இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்து பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவில் ரித்திகா முழு உடல் நலத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதில் இருந்து ரோகித் சர்மா மற்றும் ரித்திகா ஜோடிக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குட்டி ஹிட்மேன் வந்துவிட்டதாக, ரோகித் சர்மாவின் ரசிகர்களில் இணையத்தில் வாழ்த்துகளையும், மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். ரோகித் சர்மா மற்றும் ரித்திகா ஜோடிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. மனைவியின் பிரசவ தேதி நெருங்கி வந்ததன் காரணமாகவே, ரோகித் சர்மா பார்டர்-கவாஸ்கட் டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>