கருப்பு படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் சாமியாட ஆட்களை அனுப்பியதாக வெளியான குற்றச்சாட்டுக்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பதிலளித்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, ஷிவதா, நட்டி, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகிபாபு உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த மே 15ம் தேதி வெளியான படம் “கருப்பு”. சாய் அபயங்கர் இசையமைத்த இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. கடவுள் கருப்பசாமியை மையப்படுத்திய இப்படத்தில் பக்தி பாடல் ஒன்றும் கிளைமேக்ஸில் இடம்பெற்றுள்ளது.

இந்த படம் வெளியான நாளில் இருந்து இந்த பாடல் வரும் இடத்தில் பலரும் பக்தி பரவசத்தில் சாமியாடி வருகின்றனர். இது மிகப்பெரிய அளவில் சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி சாமியாடும் நபர்களுக்கு அருகில் இருப்பவர்கள் உதவ வேண்டும் என நடிகர் சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

<iframe title="Sekar Babu VS Sinora Ashok | கைதாகிறாரா சேகர் பாபு? கொலை முயற்சி வழக்கு!ஆட்டத்தை தொடங்கிய தவெக" src="https://www.youtube.com/embed/xiuZ-OwlEAI" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அதேபோல் மக்களுக்கும் அதிகம் இருக்கிறது என்பது தியேட்டரில் பார்க்கும்போது தெரிகிறது. நான் 2 சாமி படம் தான் பண்ணியிருக்கிறேன். நல்ல படம் பண்ணினால் மக்கள் மனதில் நிற்கும் என நினைக்கிறேன். மத்த ஜானரில் கதைகளும் இருக்கிறது. இப்போதைக்கு கருப்பு மாதிரி சாமி படம் பண்ணதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான்.

Theatre la Summa Saami Aattam..💥@Screenmahas 🔥 @RJ_Balaji @DreamWarriorpic @SaiAbhyankkar#Karuppu @Suriya_offl pic.twitter.com/jGT5bMoFmJ

— ராஜுபாய் (@Rajkallaisfc) May 16, 2026

கருப்பசாமி நம் ஊரின் எல்லைச்சாமியாக திகழ்கிறார். சாதி, மதம் பார்க்காமல் அனைவரும் வணங்குவார்கள். அப்படியான மக்களும் இப்படத்தை கொண்டாடுவது சந்தோசமாக உள்ளது. பேமிலி ஆடியன்ஸுக்காக தான் படம் பண்ணியுள்ளேன். விமர்சனம் செய்பவர்களுக்காக அல்ல. இன்ஸ்டாகிராமில் பார்த்தால் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டிருப்பதைக் கண்டு மனநிறைவாக உள்ளது. சில பேர் தியேட்டரில் சாமியாட புரொடக்‌ஷன்ஸ் கம்பெனியில் இருந்து ஆள் அனுப்பி விடுவதாக சொல்கிறார்கள்.

எங்களால் அவ்வளவு பட்ஜெட் செலவு செய்ய முடியாது. அப்படி செய்ய வேண்டும் என்றால் அது படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும். கோடைகாலம் வந்து விட்டாலே குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு தியேட்டருக்கு வருவார்கள். அப்படியான சரியான நேரத்தில் கருப்பு படம் வெளியாகியுள்ளது” என தெரிவித்தார்.

தொடர்ந்து சினிமாவில் இருந்து வந்த விஜய், முதலமைச்சரானது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “திரைத்துறையை சார்ந்த விஜய் முதல்வராக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் வருகையால் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். விஜய் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மக்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் நானும் இருக்கிறேன்” என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.