Renault Kiger Facelift: க்ரேட்டா ஸ்டைலில் டாடா விலையில்.. ரெனால்டின் கைகர் ஃபேஸ்லிஃப்ட் லாஞ்ச் - எப்படி இருக்கு?
3 months ago 4
ARTICLE AD
Renault Kiger Facelift 2025: ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலின் தொடக்க விலை, 6 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மேம்படுத்தப்பட்ட அதாவது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட, கைகர் கார் மாடலை ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளடு. அதன் விலை 6 லட்சத்து 29 ஆயிரம் முதல் 11 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யுவியில் இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் செய்யப்படாவிட்டாலும், காஸ்மெடிக் அப்டேட்களுடன் புதிய தொழில்நுட்ப அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பழைய மாடலானது RXE, RXL, RXT(O) மற்றும் RXZ என நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதிய எடிஷனானது அதெண்டி, எவல்யூஷன், டெக்னோ மற்றும் எமோஷன் ஆகிய க்ரேட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் அம்சங்கள் மற்றும் புதிய ஸ்டைலிங் காரணமாக, பழைய எடிஷனை காட்டிலும் புதிய கைகர் காரின் விலை 14 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற அப்டேட்கள்
டிசைன் அடிப்படையில் புதிய கைகர் ஃபேஸ்லிஃப்டானது C-பில்லரில் புதிய கிராபிக்ஸ், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், புதியதாக வடிவமைக்கப்பட்ட ரெனால்ட் லோகோ ஆகியவற்றை விசுவல் அப்டேட்களாக பெற்றுள்ளது. கூடுதலாக, சில்வர் சரவுண்டிங்கை கொண்ட எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் ஃபாக் லேம்பை கொண்ட சற்றே மாற்றப்பட்ட முன்புற பம்பர் இடம்பெற்றுள்ளது. டாப் என் வேரியண்ட்களானது ரூஃபில் டூயல் டோன் ஃபினிஷ் உடன், A, B மற்றும் C-பில்லர் ஆப்ஷன்களையும் பெறுகிறது.
இந்த காரில் எக்ஸ்க்ளூசிவ் சிறப்பு ஆப்ஷனாக ஓயாசிஸ் எல்லோ வண்ணம் வழங்கப்படுகிறது. இதுபோக ஷேடோ க்ரே, ரேடியண்ட் ரெட், காஸ்பியன் ப்ளூ, ஐஸ் கூல் வைட், மூன்லைட் சில்வர் மற்றும் ஸ்டெல்த் ப்ளாக் ஆகிய வண்ண ஆப்ஷன்களும் புதிய கைகரில் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் - உட்புற அப்டேட்கள்
உட்புறத்தில் புதிய கைகர் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது டூயல் டோன் ப்ளாக் & க்ரே டேஷ்போர்டை பெறுகிறது. புதிய அப்ஹோல்ஸ்ட்ரியில் வெண்டிலேடட் லெதரேட் சீட்ஸ், தரம் உயர்த்தப்பட்ட நாய்ஸ் இன்சுலேஷன் அம்சங்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக மல்டி-வியூ கேமரா, ஆட்டோமேடிக் முகப்பு விளக்குகள், ரெயின் சென்சிங் வைப்பர்ஸ், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, 8 இன்ச் ஃப்ளோட்டிங் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ப்ரீமியம் 3D ஆர்கமிஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் கவனத்தை ஈர்க்கின்றன.
ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின் விவரங்கள்
இன்ஜின் ஆப்ஷப்ன்களில் நேட்சுரலி ஆஸ்பிரேடட் 1.0 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடர்கிறது. முதல் ஆப்ஷன் 71bhp மற்றும் 96 Nm ஆற்றலையும், இரண்டாவது ஆப்ஷன் 98.5bhp மற்றும் 160Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இரண்டு இன்ஜின்களிலும் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஸ்டேண்டர் ஆக வழங்கப்படுகிறது. கூடுதலாக நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜினில் 5 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினில் CVT ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் கைகர் கார் மாடல் லிட்டருக்கு, 18 முதல் 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின் விவரங்கள்
கைகர் ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட்
விலை (எக்ஸ் - ஷோரூம்)
அதெண்டிக் எனெர்ஜி மேனுவல்
ரூ.6,29,995
எவல்யூஷன் எனெர்ஜி மேனுவல்
ரூ.7,09,995
டெக்னோ எனர்ஜி மேனுவல்
ரூ.8,19,995
எமோஷன் எனர்ஜி மேனுவல்
ரூ.9,14,995
எவல்யூஷன் ஈசி-R AMT
ரூ.7,59,995
டெக்னோ ஈசி-R AMT
ரூ.8,69,995
எமோஷன் டர்போ மேனுவல்
ரூ.9,99,995
டெக்னோ டர்போ-X Tronic CVT
ரூ.9,99,995
எமோஷன் டர்போ-X Tronic CVT
ரூ.11,29,995
ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் - போட்டியாளர்கள்
ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்டானது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், மிகவும் போட்டித்தன்மை மிக்க சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யு, கியா சோனெட், மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா, டொயோட்டா டைசர், மாருதி ஃபிராங்க்ஸ், மஹிந்த்ரா XUV 3XO, நிசான் மேக்னைட் மற்றும் ஸ்கோடா கைலாக் ஆகிய கார் மாடல்களில் இருந்து கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
Read Entire Article