Renault Duster 2026: ரெனால்ட் டஸ்டரின் எந்த வேரியண்ட் பெஸ்ட்? அம்சங்கள், விலையில் எது கட்டுப்படி ஆகும்?
3 weeks ago 4
ARTICLE AD
Renault Duster 2026 Variants: ரெனால்ட் சந்தைப்படுத்தியுள்ள புதிய டஸ்டர் கார் மாடலின் ஒவ்வொரு வேரியண்டிலும் உள்ள அம்சங்களின் ஒப்பீட்டை இங்கே அறியலாம்.
ரெனால்ட் டஸ்டர் 2026 வேரியண்ட்கள்:
ரெனால்ட் நிறுவனம் தனது மூன்றாவது தலைமுறை டஸ்டர் கார் மாடலை, முற்றிலும் மறுவேலை செய்யப்பட்ட டிசைன், பெரிய அளவில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், நவீன ப்ரீமியம் அம்சங்களுடன் சந்தைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முன்பு இருந்ததை காட்டிலும் மிகவு போட்டித்தன்மையுடன் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் புதிய டஸ்டர் களமிறங்கியுள்ளது. இதில் இரண்டு டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஒரு வலுவான ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.10.49 லட்சத்தில் தொடங்கி, ரூ.18.49 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை இதன் விலை வரம்பு நீடிக்கிறது.
ரெனால்ட் டஸ்டர் - வேரியண்ட்கள் எப்படி?
டஸ்டர் கார் மாடலானது அதெண்டிக், எவல்யூசன், டெக்னோ/டெக்னோ+ மற்றும் ஐகானிக் ஆகிய 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வேரியண்டும் ஒவ்வொரு அம்சத்திற்கு முக்கியத்துவம் அளித்து, தனித்துவமாக காட்சியளிக்கின்றன. அதன்படி,
அடிப்படை வேரியண்டான அதெண்டிக் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. விலைக்கு உகந்த உபகரணங்களை கொண்டிருந்தாலும், நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் சொகுசு வசதிக்கான அம்சங்கள் இதில் இடம்பெறவில்லை. எனவே, பட்ஜெட்டில் பாதுகாப்பான கார் வாங்க விரும்புவோருக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்
எவல்யூசன் வேரியண்டானது முக்கிய முன்னேற்றமாக இருப்பதோடு, விலைக்கு நிகரான மதிப்பையும் கொண்டுள்ளது. நியாயமான விலை உயர்வுக்கு ஏற்ப 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன், வயர்லெஸ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருப்பதோடு, கூடுதல் சக்தி வாய்ந்த 1.3 லிட்டர் இன்ஜின் ஆப்ஷனையும் பெறுகிறது.
அடுத்ததாக, டெக்னோ வேரியண்டை ஆராய்ந்தால் டஸ்டர் மாடலானது ப்ரீமியம் கார் மாடல் அனுபவத்தை வழங்குகிறது. பனோரமிக் சன்ரூஃப் தொடங்கி பவர்ட் டெயில் கேட் வரையிலான அம்சங்களை பெறுகிறது.
மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அம்சங்களை வழங்குவதாக டெக்னோ + மற்றும் ஐகானிக் வேரியண்ட்கள் திகழ்கின்றன. அதன்படி, லெவல் 2 ADAS, 360 டிகிரி கேமரா, வெட்னிலேடட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளன. இந்த வேரியண்ட்கள் கொண்டுள்ள விலையானது, அனைத்து வாய்ப்புள்ள அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் பயனர்களுக்கு சரியானதாக இருக்கும்.
ரெனால்ட் டஸ்டர் - வேரியண்ட்களில் உள்ள அம்சங்கள் என்ன?
1. அதெண்டிக்: விலை - ரூ.10.29 லட்சம்
சாம்பல் நிறத் தையல்களுடன் கூடிய கருப்பு இருக்கை உறை
60/40 மடக்கக்கூடிய பின்புற இருக்கைகள்
7-அங்குல TFT ட்ரைவர் டிஸ்ப்ளே
சாவி இல்லாத நுழைவு
முன் கன்சோலில் 12V சாக்கெட்
டில்ட் மற்றும் டெலெஸ்கோபிக் ஸ்டீயரிங் வீல்
ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் உடன் கூடிய சென்ட்ரல் கன்சோல்
பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி
தானாக மேலும் கீழும் செல்லும் பவர் விண்டோ (அனைத்தும்)
சென்ட்ரல் லாக்
ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்
எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம்
வகார்னெரிங் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்
மின்னணு எலெக்ட்ரானிக் ப்ரேக் ஃபோர்ஸ் பகிர்வு மற்றும் பிரேக் உதவியுடன் கூடிய ஏபிஎஸ்
டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
3 பாயிண்ட் சீட் பெல்ட் (அனைத்து இருக்கைகளிலும்)
ISOFIX இருக்கைகள்
6 ஏர் பேக்குகள்
LED DRL-களுடன் கூடிய தானியங்கி LED முகப்பு விளக்குகள்
எல்இடி பின்புற விளக்குகள்
ORVM-களில் இண்டிகேட்டர்களை இயக்கவும்
பின்புற ஸ்பாய்லர்
உறையுடன் கூடிய 17-அங்குல எஃகு சக்கரங்கள்
எவல்யூசன்: விலை - ரூ.11.39 - 14.49 லட்சம்
அதெண்டிக் வேரியண்டில் இருப்பதோடு, கூடுதலாக வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே
6 ஸ்பீக்கர் ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம்
ஸ்டீயரிங் வீலில் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் தொலைபேசி கட்டுப்பாடுகள்
ஓட்டுநர் திரையில் டர்ன் - பை - டர்ன் நேவிகேஷன்
எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்டபள் ORVMகள்
ரியர் வியூ கேமரா
க்ரூஸ் கன்ட்ரோல்
ஆட்டோ-ஹோல்டுடன் கூடிய மின்னணு பார்க்கிங் பிரேக் (DCT-க்கு மட்டும்)
பேடில் ஷிஃப்டர்கள் (DCT-க்கு மட்டும்)
17 இன்ச் அலாய் சக்கரங்கள்
ஷார்க் ஃபின்ஆண்டெனா
பிளாக் ரூஃப் ரெயில்ஸ் (50 கிலோ எடை தாங்கும் திறன்)
எல்இடி ஹாரிசாண்டல் ரியர் லைட் பார்
எல்இடி பின்புற மூடுபனி விளக்குகள்
பின்புற வைப்பர் மற்றும் வாஷர்
பின்புற டி-ஃபாகர்
2 முன்பக்க டைப்-சி USB சாக்கெட்டுகள்
2 பின்புற டைப்-சி USB சாக்கெட்டுகள்
பவர்டிரெய்ன்கள்: 100hp 1.0L MT, 163hp 1.3L MT / 6DCT
டெக்னோ: விலை - ரூ.13.19 - 15.89 லட்சம்
எவல்யூசன் வேரியண்டில் இருப்பதோடு, கூடுதலாக வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல்
பனோரமிக் சன்ரூஃப்
புஷ் பட்டன் ஸ்டார்ட்
வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர்
ஆட்டோ ஃபோல்ட் IRVM
பவர்ட் டெயில் கேட்
ஆட்டோ ஃபோல்ட் ORVMகள்
எல்இடி ஃப்ரண்ட் ஃபாக் லேம்ப்ஸ்
எல்இடி படல் லேம்ப்ஸ்
துணி இருக்கை உறை
கூல்ட் ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய சென்டர் கன்சோல் (DCT-க்கு மட்டும்)
வேனிட்டி மிரர் மற்றும் ஒளியூட்டிகளுடன் கூடிய சன் வைசர் (ஓட்டுநர் மற்றும் பயணிக்கு)
டெக்னோ+: விலை - ரூ.14.99 - 16.69 லட்சம்
டெக்னோ வேரியண்டில் இருப்பதோடு, கூடுதலாக வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
10.25 இன்ச் TFT ட்ரைவர் டிஸ்ப்ளே
அகவுஸ்டிக் விண்ட்ஷீல்ட்
18 இன்ச் அலாய் வீல்கள்
ப்ளைண்ட் ஸ்பாட் வார்னிங்
முன் மற்றும் பக்கவாட்டு பார்கிங் அசிஸ்ட்
பவர்டிரெய்ன்கள்: 163hp 1.3L MT / 6DCT
ஐகானிக்: விலை - ரூ.16.59 - 18.49 லட்சம்
டெக்னோ+ வேரியண்டில் இருப்பதோடு, கூடுதலாக வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆம்பியண்ட் லைட்டிங்
ட்ரைவ் மோட்கள்: கம்ஃபர்ட், ஈகோ, பெர்சோ
ஸ்டீயரிங் மோட்கள்
PM2.5 காற்று வடிகட்டி
எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள்
முன் காற்றோட்ட இருக்கைகள்
மாறுபட்ட வண்ண வேலைப்பாடுகளுடன் கூடிய லெதரெட் இருக்கை உறை
சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம்
கூகுள் ஒருங்கிணைப்புடன் கூடிய 10.1-அங்குல டச்ஸ்க்ரீன்
ஓட்டுநரின் திரையில் மேப் வசதி
360 டிகிரி கேமரா
ஸ்டாப்-அண்ட்-கோ வசதியுடன் கூடிய அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் (DCT-க்கு மட்டும்)
மழையை உணரும் வைப்பர்கள்
லெவல் 2 ADAS
டஸ்டரின் எந்த வேரியண்ட் பெஸ்ட்?
டஸ்டரின் 5 வேரியண்ட்களில் உள்ள அம்சங்களும் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், இதில் எது பெஸ்ட் என ஆலோசிக்கிறீர்களா? விலை, அம்சங்கள் மற்றும் செயல்திறனை ஒருங்கிணைக்கும் ஒரு சரியான தேர்வாக எவல்யூசன் திகழ்கிறது. இதை வாங்குவது ஒரு நல்ல முடிவாக இருக்கும் என வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதேநேரம், கூடுதல் தொகையை செலவழிக்க முடியும் என நம்புபவர்கள், தாராளமாக டஸ்டரின் டெக்னோ வேரியண்டை தேர்வு செய்யலாம்.
Read Entire Article