இந்தியாவில் டாடா, மஹிந்திரா, ஹுண்டாய் என பல கார் நிறுவனங்கள் இருந்தாலும் ரெனால்ட் நிறுவனத்தின் கார்களுக்கு என்று தனி மவுசு இந்தியாவில் உள்ளது.

ரெனால்ட் நிறுவனத்தின் கார்களில் ரூபாய் 10 லட்சம் பட்ஜெட் விலைக்கு கீழே உள்ள கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Renault Kwid:

ரெனால்ட் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார் இந்த Renault Kwid ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5.12 லட்சம் ஆகும். இந்த காரில் 15 வேரியண்ட் உள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 7.28 லட்சம் ஆகும். 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்ட கார். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் திறன் கொண்டது இந்த கார். இந்த கார் 22 கிலோ மீட்டர் மைலேஜ் திறன் கொண்டது. இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ் ப்ரேக் வசதி கொண்டது.

2. Renault Kiger:

ரெனால்ட் காரின் மற்றொரு படைப்பு Renault Kiger ஆகும். இந்த காரின் தொடக்க விலை 6.87 லட்சம் ஆகும். sub-compact SUV காரான இந்த காரின் டாப் வேரியண்ட் 12.81 லட்சம் ரூபாய் ஆகும். இந்த காரில் மொத்தம் 19 வேரியண்ட் உள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்ட திறன் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் திறன் கொண்டது. 99 பிஎச்பி திறன் கொண்டது. 6 ஏர்பேக்குகள் உள்ளது. 96 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதன் உட்கட்டமைப்பு மிகப்பெரும் வசதி கொண்டது.

3.Renault Triber:

ரெனால்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றிகரமான தயாரிப்பு இந்த Renault Triber ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.88 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 10.18 லட்சம் ஆகும். 11 வேரியண்ட்கள் இந்த காரில் உள்ளது. 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு ரூபாய் 80 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. நெருக்கடி மிகுந்த நகர்ப்புறங்களில் 13.64 கிலோ மீட்டரும், நெடுஞ்சாலைகளில் ரூபாய் 17.86 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 7 சீட்டர் இருக்கை கொண்ட கார் இதுவாகும்.

4. Renault Kwid EV:

ரெனால்ட் நிறுவனத்தின் Renault Kwid காரின் மின்சார வாகன வெர்சன் Renault Kwid EV இந்த கார் ஆகும். ஹேட்ச்பேக் காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் 11 லட்சம் ரூபாய் ஆகும். 26.8 கிலோவாட் பேட்டரி கொண்ட திறன் கொண்ட கார் ஆகும். இந்த கார் அதிகபட்சமாக 305 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும். 65 பிஎச்பி மற்றும் 125 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது ஆகும். இந்த கார் 6 ஏர்பேக், ஏபிஎஸ் ப்ரேக் வசதி கொண்டது.