பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே கூட்ட நெரிசல் காரணமாக ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. பெங்களூரு அணி வீரர்களை வரவேற்பதற்காக வழிநெடுகிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றன.

முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் இருந்து சின்னசாமி மைதானம் வரை ஆர்சிபி அணிக்கு வெற்றி பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களால் அந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. இருந்தபோதிலும், ஆர்சிபி வீரர்களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானத்தை சுற்றி ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

VIDEO | Child faints outside Bengaluru's Chinnaswamy Stadium as a massive crowd gathers to celebrate Royal Challengers Bengaluru's IPL 2025 victory.

(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz)' pic.twitter.com/fFqKswmm3y

— Press Trust of India (@PTI_News) June 4, 2025

இந்த நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களும் படுகாயம் அடைந்தவர்களும் பௌரிங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.