Rasi Palan Today (18-09-2026): பிறந்தது புரட்டாசி மாதம்.. முதல் நாளே எந்த ராசிக்கு லக்? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள்!

1 month ago 3
ARTICLE AD

செப்டம்பர் மாதம் 18ம் நாள் வெள்ளிக்கிழமை புரட்டாசி மாதத்தின் முதல் நாளாகும். பெருமாளுக்குரிய தினமாக பார்க்கப்படும் இந்த மாதத்தின் முதல் நாளில் 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்.

இன்றைய ராசிபலன்கள் (செப்டம்பர் 18)

மேஷம்

குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்படும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெறும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாகி நிறைவு பெறும். வாக்குறுதிகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள்.

ரிஷபம்

உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மனதிற்கு நம்பிக்கையை தரும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். பயனற்ற செலவுகளை தவிர்ப்பீர்கள். வியாபாரப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.

மிதுனம்

கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சேமிப்பு செயல்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் நிமித்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். எழுத்து பணிகளில் புதுமையான சூழல் அமையும். சிறு மற்றும் குறுந்தொழிலில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்

எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் தடைகள் தோன்றி மறையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விவேகமான சிந்தனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறுதூரப் பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகள் வழியில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

சிம்மம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உருவாகும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் துரிதமும் விவேகமும் வெளிப்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

கன்னி

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலையாட்கள் பற்றிய புரிதல் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும். பணி தொடர்பான மனக்குழப்பங்கள் உண்டாகும். சிறு வியாபாரம் தொடர்பான விஷயங்களில் காரிய வெற்றி ஏற்படும்.

துலாம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்து வந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பூர்வீகம் தொடர்பான சொத்துக்களில் தீர்வுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

தேக ஆரோக்கியத்தில் பொலிவு கூடும். அலைபாயும் மனதினால் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும்.

தனுசு

மறைமுக வருமானங்கள் சிலருக்கு உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் நம்பிக்கையை உருவாக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும்.

மகரம்

தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். இணையப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மீது சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நினைவுகள் மூலம் மன அமைதி உருவாகும்.

கும்பம்

உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் மனதில் மேம்படும். பயணத்தின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பம் குறையும்.

மீனம்

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். மேலதிகாரியுடன் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருவாயில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். வியாபார விருத்தி சார்ந்த முயற்சிகளை எடுப்பீர்கள்.

Read Entire Article