தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஹூன் கைது செய்யப்பட்டுள்ளது மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

புஷ்பா- 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது அங்கு அல்லு அர்ஜூன் சென்றுள்ளார். அவரை காண ஏராளமான கூட்டம் கூடிவிட்டது. திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியை காண, கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காண சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது, ஹைதராபாத் காவல் துறையினர் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக அல்லு அர்ஜூனை இன்று காவல்துறை கைது செய்தது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

I can’t believe what I am seeing right now..

The incident that happened was an unfortunate and deeply saddening incident.

However, it is disheartening to see everything being blamed on a single individual. This situation is both unbelievable and heartbreaking.

— Rashmika Mandanna (@iamRashmika) December 13, 2024

ராஷ்மிகா மந்தனா எக்ஸ் தளப் பதிவு:

அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா கருத்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ்தளப் பதிவில்,” இந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. திரையரங்கில் ஏற்பட்ட நிகழ்வு வேதனைக்குரியது; ஒருவரின் உயிரிழப்பு துர்திஷ்டவசமான ஒன்று. இருப்பினும், எல்லாவற்றிருக்கும் ஒருவர் மீது மட்டுமே பழி சொல்வது வேதனையளிக்கிறது.” என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.