Rajmohan: "மக்கு மாணவன் நான்.. அமைச்சர் ஆவேன்னு நினைக்கல.." மனம் திறந்த அமைச்சர் ராஜ்மோகன்!

2 months ago 4
ARTICLE AD

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,

மக்கு மாணவன்:

உங்களால் முடியும் என்று நீங்கள் நம்புங்கள். ஒரு ஏழை, எளிய வீட்டில் பிறந்து வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியாமல், மிகவும் போராடி படித்து மக்கு மாணவனாக, மெல்ல கற்கும் குழந்தையாக இருந்து படித்து வாழ்க்கையில் எப்படியாவது பெரிய ஆளாக மாற முடியும் என்ற நம்பிக்கையில், கிடைத்த சிறு, சிறு வாய்ப்புகளில் மைக்கைப் பிடித்து 50 பேர் இருந்தாலும், 5 பேர் இருந்தாலும் பேசுறது, அனைத்து இடங்களிலும் ஓடி, ஓடி பேசுறது.

அமைச்சரவையில் வருவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. உன்னால் முடியும் என்று கையைப் பிடித்து தூக்கிவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய் என்ற ஒரு மனிதர் மீது நம்பிக்கை வைத்தேன். அப்போது, நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், என்றோ ஒருநாள் யாரோ ஒருவர் நம் மீது நம்பிக்கை வைத்து தூக்கிவிடும்போது அதற்கு ஏற்ப தகுதியானவர்களை முழு உழைப்பைச் செலுத்தி நம்மை நாம் நம்ப வேண்டும்.

பேச முடியவில்லை:

கடிகார முள்ளுடன் கடுமையாக போட்டி போட்டுக் கொண்டிருக்கிறேன். கைக்கு கடிகாரம் இல்ல காலண்டரே இருந்தாலும் போதவில்லை. பரப்புரை களத்தில் 100 நாட்கள் வீட்டில் சரியான பேச்சுவார்த்தை இல்லை. பேச முடியவில்லை. நேரம் செலவழிக்க முடியவில்லை.

நான் நின்ற இடம் இன்னொரு கட்சியின் கோட்டை. தமிழ்நாடு முழுக்க தோற்றபோதும் அவர்கள் வென்ற இரு இடங்களில் ஒரு இடம் அந்த தொகுதி. இதனால் கடுமையாக போராடி வெற்றி பெற்று சான்றிதழ் வாங்கி வீட்டிற்கு வரும்போதுதான் நான் நீண்ட நாட்களாக வீட்டில் சரியாக சாப்பிடவில்லை என்று உணர்ந்தேன்.

நன்றி சொல்லவா? மன்னிப்பு கேட்கவா?

சின்ன குடியிருப்பில்தான் எனது வீடு. நான் நன்றி சொல்லவா? மன்னிப்பு கேட்வா? என்று தெரியவில்லை. எனது குட்டி மகன் என்னை ஓடி வந்து கட்டிப்பிடித்தான். என் மனைவி ஆரத்தி எடுத்தோம். நாங்கள் அப்போது சரியாக பேசிக்கொள்ளாமல் வேறு இருந்தோம். பதவியேற்பு விழாவிற்கு வேறு அவர்களை அழைத்துச் செல்ல முடியாத சூழல் வேறு இருந்தது.

நம்ம ஸ்டைல்லயே நாம மன்னிப்பு கேட்போம் என்று சாப்பிட்டியாமா? என்று கேட்டேன். அவங்க நான் சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா?னு கேட்டேன். இப்போது எல்லாம் அவர்களே புரிந்து கொண்டு நானே 10 நிமிடம் உட்கார்ந்து இருந்தாலும் கூட்டத்திற்கு நேரம் ஆகிவிட்டது கிளம்பி போங்கள் என்கிறார். அதனால், நேரம் போதவில்லை.

எங்கள் கழகத்திலும் சரி, நண்பர்கள் வட்டத்திலும் சரி உறவுகள் என்பவர்கள் கூடப்பிறந்தவர்கள் மட்டும் கிடையாது. யாரெல்லாம் மண்ணையும், மக்களையும், இந்த ஊரையும் நேசிக்கிறார்களோ? அவர்கள் எங்கள் உறவுகள். இங்க இருக்கும் அனைத்தும் பேரும் உறவுகள்தான். ஊருக்கு உழைக்கும் ஒவ்வொருவரும் எங்கள் உறவுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்:

அமைச்சர் ராஜ்மோகன் தவெக-வில் இணைந்து அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார். இவர் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தவெக அரசின் முதல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.  சட்டசபைக் கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் தக்க முறையில் பதிலளித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article