Rajinikanth: திமுக - அதிமுகவை இணைக்க ரஜினிகாந்த் முயற்சித்தாரா? உண்மையை உடைத்த சூப்பர்ஸ்டார்!

3 weeks ago 5
ARTICLE AD

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி பல கட்ட பரபரப்பிற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று  முதலமைச்சராக பொறுப்பேற்றார். தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானாலும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்க இயலாமல் விஜய் அவதிப்பட்டு வந்தார்.

ரஜினிதான் காரணமா?

இந்த சூழலில், திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்க திட்டமிட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகியது. இந்த விவகாரத்திற்கு ரஜினிகாந்தே காரணம் என்று தொடர்ந்து இணையத்தில் தகவல்கள் வெளியானது.

இந்த சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்தின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  அவர்களும் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலினும் 42 ஆண்டு கால நண்பர்கள். நட்பு ரீதியாக ஸ்டாலினைச் சந்தித்தார். இதுலே எந்த அரசியலும் இல்லே. இதை மீடியா தேவையில்லாமே வேறே மாதிரி எதையும் பரப்பாதீங்க என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலினைச் சந்தித்த ரஜினிகாந்த்:

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் வெளியாகிய நிலையில், திமுக யாருமே எதிர்பாராத சூழலில் தோல்வி அடைந்தது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவரான முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது பலருக்கும் பேரதிர்ச்சியை உண்டாக்கியது. தவெக-வும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் தவித்து வந்த நிலையில், கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய சூழலில் ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின்னரே, திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

ரஜினிகாந்த் மீது விமர்சனம்:

இந்த விவகாரத்திற்கு ரஜினிகாந்தே மூல காரணம் என்றும், அவர் மூலமாக பாஜக காய் நகர்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்த சூழலில், இந்த விவகாரத்திற்கும் ரஜினிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் நெருக்கமான உறவு கொண்டவர். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்குவதாக அறிவித்து பின்னர் உடல்நலத்தை காரணம் காட்டி கட்சி தொடங்காமல் இருந்துவிட்டார். பின்னர், கடந்த ஆட்சியில் மு.க.ஸ்டாலின் - ரஜினிகாந்த் நட்பு மேலும் வலுவாக இருந்தது.

இணையத்தில் ரஜினிகாந்த் விஜய் ரசிகர்கள் மோதல் உச்சகட்டத்தில் நடந்து வந்த தருணத்தில், ரஜினியும் திமுக-வுடன் நெருக்கமான உறவு கொண்டு வருகிறார். இந்த சூழலிலே இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானது.

Read Entire Article