புதுச்சேரி : புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (9-ந்தேதி) அவசரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் நாளை காலை முதல் மாலை வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்துறை அறிவித்துள்ளது.

மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மின்தடைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்தடை ஏற்படும் பகுதிகள் மற்றும் நேரங்களின் விவரம் வருமாறு:-

பாகூர் பகுதி:

காட்டுக்குப்பம் (பகுதி), பன்னித்திட்டு, ஈச்சங்காடு, நரம்பை, பிள்ளையார்குப்பம், வள்ளுவர்மேடு, வம்பாபேட், ஆலடிமேடு, வார்க்கால்ஓடை, புதுநகர், கன்னிகோவில், மதிகிருஷ்ணாபுரம், முள்ளோடை, மூர்த்திக்குப்பம், உச்சிமேடு, கொரவள்ளிமேடு, ஆராய்ச்சிக்குப்பம், பரிகல்பட்டு, குருவிநத்தம் மற்றும் சோரியாங்குப்பம்.

கோர்காடு பகுதி:

தனிக்குப்பம், நத்தமேடு, கம்பலிக்காரன்குப்பம், ஏம்பலம், சங்கரன்பேட்டை, மணக்குப்பம், புதுக்குப்பம், செம்பியபாளையம், கீழ்சாத்தமங்கலம், மேல்சாத்தமங்கலம், சிவராந்தகம், கீழூர், கோர்காடு, மங்கலம், வடமங்கலம், பங்கூர், அரியூர் மற்றும் அனந்தபுரம்.

சுழற்சி முறை மின்தடை:

பாகூர் தானியங்கி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், அதன் கீழ் இயங்கும் பாகூர், கோர்காடு மற்றும் ஏரிப்பாக்கம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் அனைத்துப் பகுதிகளிலும் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுழற்சி முறையில் (Rotational basis) மின் விநியோகம் நிறுத்தப்படும்.

லாஸ்பேட் மின்பாதை:

மேட்டுப்பாளையம் டிரக் முனையம் போக்குவரத்து நகரம், ஹரி நமோ நகர் (பகுதி), பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், N.R. ராஜூ நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், பல் மருத்துவ கல்லூரி, புதுப்பேட்டை (பகுதி), ராஜாஜி நகர் (பகுதி), லாஸ்பேட் (பகுதி), நெருப்புக்குழி, நவாற்குளம், Dr. அன்னி பெசண்ட் நகர், கணபதி நகர், சின்னகண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர் நகர், வாசன் நகர், பொதிகை நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், செவாலியர் சீனிவாசன் நகர், தில்லைகண்ணு அம்மா நகர், அசோக் நகர், லாஸ்பேட் அரசு ஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர், அவ்வை நகர் (பகுதி), சாந்தி நகர், லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள், பிப்மேட் (PIPMATE) அலுவலகம், விமான நிலையம் (Airport), மதிய உணவு திட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார உயர் மின் அழுத்த நுகர்வோர் பகுதிகள்.

வில்லியனூர் & பிள்ளையார்குப்பம் மின்பாதை:

தொண்டமாநத்தம் (பகுதி), இராமநாதபுரம் (பகுதி), பத்துக்கண்ணு (பகுதி), அம்மானங்குப்பம், கூடப்பாக்கம், சேந்தநத்தம், அரசூர், சுல்தான்பேட், பிள்ளையார்குப்பம், கூனிமுடக்கு, செல்லிப்பட்டு, வம்புப்பட்டு, வினாயகம்பட்டு, சோரப்பட்டு ஆகிய பகுதிகள் மற்றும் இங்குள்ள உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் பகுதியில் மின் தடை செய்யப்படும்.