கல்கி 2898 AD (Kalki 2898 AD)

பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படம் வரும் ஜூன் 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வைஜயந்தி மூவீஸ் தயாரித்து நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் , ரானா டகுபதி , தீபிகா படூகோன் , கமல்ஹாசன் , ஷோபனா , அனா பென் , திஷா பதானி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் , இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. படம் ரிலீஸை நெருங்கும் நிலையில் படக்குழுவினர் மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடுகர் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் , நடிகர் பிரபாஸ் , கமல்ஹாசன் , ரானா டகுபதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். விரைவில் தனது முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் தீபிகா படுகோன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். மேலும் நடிகர் பிரபாஸ் குறித்து தீபிகா பேசியுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது

கல்கி படத்தில் நடித்த அனுபவம்

கல்கி படத்தில் நடித்தது குறித்து பேசிய நடிகை தீபிகா படுகோன் ”இந்தப் படத்தில் நான் ஒரு அன்னையின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மீதியை ரசிகர்கள் படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளட்டும் . ஆனால் இந்தப் படம் துவங்குவதற்கும் முன்பு நாங்கள் ஜூம் மீட்டிங்கில் படத்தின் கதையை எங்களுக்கு இயக்குநர் நாக் அஸ்வின் சொன்னார்.

அப்போது அவர் இந்த கதையை கற்பனை செய்து வைத்திருக்கும் விதத்திலும் சின்ன சின்ன தகவல்களை அவர் தெரிவிக்கும் விதத்திலும் அவரது ஆளுமையை என்னை ஆச்சரியப் படுத்தியிருக்கிறது. அவரது உலகத்திற்குள் செல்வது எங்கள் அனைவருக்கும் புது விதமான அனுபவமாக இருந்தது“ என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாஸ் வீட்டு சாப்பாடு

#DeepikaPadukone:

"I'm like this because of all the food #Prabhas has fed me! It got to a point, it wasn't just food coming from home, there was like full catering service! ❤️"

"Release KALKI Trailer 2 Now"#KALKI2898AD‌ #Prabhas #LaunchKalkiLeakedTrailer #DeepikaPadukone pic.twitter.com/YsmmQWgTtW

— 𝐂𝐄𝐎🚩 (@IamChampu009) June 20, 2024

தனது எல்லா படப்பிடிப்பின்போதும் படக்குழுவிற்கு, தனது வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வருவது வழக்கம் என்பது நமக்கு தெரியும். ஆனால் கல்கி படத்தின்போது பிரபாஸ் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்ட தீபிகா படுகோன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா “நான் இப்படி வலுவாக இருப்பதற்கு காரணம் பிரபாஸ் வீட்டு சாப்பாடுதான். ஒவ்வொரு நாளும் அவரது வீட்டிற்கு ஒட்டுமொத்த படக்குழுவிற்கே கேட்டரிங் சர்வீஸ் மாதிரி சாப்பாடு வரும்“ என்று தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.