Pongal 2026 TV Movies: பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகும் சுமாரான படங்கள்.. கடுப்பாகும் ரசிகர்கள்!

3 months ago 5
ARTICLE AD

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்ம டிவி சேனல்களுக்கு என்ன தான் ஆச்சு  என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொதுவாக தமிழ் சினிமாவும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது. அந்த அளவுக்கு வலுவான பிணைப்பு இருக்கும். இதனால் தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், விடுமுறை தினங்களிலும், பண்டிகை நாட்களிலும் தியேட்டர், ஓடிடி, டிவி ஆகியவற்றில் என்ன படம் போட்டிருக்கிறார்கள் என ஆராய்வோம். டிவியை எடுத்துக் கொண்டால் பல்வேறு சேனல்கள் ஒளிபரப்பாகின்றன. ஒரு காலத்தில் எந்த சேனலில் பண்டிகை நாட்களில் பார்த்தாலும் புதுப்படம் போடுவார்கள்.

ஆனால் இதெல்லாம் இப்போது குறைந்து விட்டது. குறிப்பிட்ட 3 அல்லது 4 சேனல்களில் மட்டும் புதுப்படங்கள் ஒளிபரப்பாகிறது. அதுவும் சம்பந்தமில்லாத நேரமாகவும் இருக்கலாம். டிவி சேனல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இன்றளவும் உள்ளது. எனினும் ஓடிடி வரவேற்பால் புதுப்படங்களை பெரிதளவு ஒளிபரப்புவதில்லை. பல படங்கள் தியேட்டரில் வெளியானாலும், ஓடிடியில் வந்தாலும் சேட்டிலைட் உரிமை விற்பனையாகாததால் ஒளிபரப்பாகமல் கிடக்கிறது.

இப்படியான நிலையில் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதில் ரெட்ரோ, பைசன், மதராஸி, காந்தாரா சாப்டர் 1, சக்தி திருமகன், ஹவுஸ்மேட்ஸ் என சொல்லக்கூடிய அளவில் புதுப்படம் ஒளிபரப்பாவதால் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதில் சில சேனல்கள் பழையப் படங்களை ஒளிபரப்ப உள்ளதால் ப்ரோமோக்களை வெளியிடவில்லை.

பொங்கல் பண்டிகை (ஜனவரி 15ம் தேதி)

சன் டிவி

காலை 11 மணிக்கு - திருச்சிற்றம்பலம்

மதியம் 3 மணிக்கு - சீமராஜா

மாலை 6.30 மணிக்கு - ரெட்ரோ

விஜய் டிவி

காலை 10.30 மணி - டீசல்

மாலை  4 மணிக்கு - பைசன்

ஜீ தமிழ்

காலை 10.30 மணி - மாமன்

மதியம் 1.30 மணி - ஹவுஸ்மேட்ஸ்

மாலை 6 மணி - மதராஸி

கலைஞர் டிவி

மதியம் 1.30  மணி - வதந்தி வெப் சீரிஸ்

மாட்டுப் பொங்கல் (ஜனவரி 16ம் தேதி)

சன் டிவி

மாலை 6.30 மணி - அண்ணாத்த

கலைஞர் டிவி

மதியம் 1.30  மணி - வதந்தி வெப் சீரிஸ்

ஜீ தமிழ்

மதியம் 12.30 மணிக்கு - தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

மாலை 6 மணிக்கு - காந்தாரா சாப்டர் 1

விஜய் டிவி

காலை 10.30 மணிக்கு - டூரிஸ்ட் பேமிலி

மாலை 4 மணிக்கு - சக்தி திருமகன்

காணும் பொங்கல் (ஜனவரி 17ம் தேதி)

சன் டிவி

மாலை 6.30 மணிக்கு - விஸ்வாசம்

கலைஞர் டிவி

மதியம் 1.30  மணி - வதந்தி வெப் சீரிஸ்

விஜய் டிவி

காலை 10 மணிக்கு - டிஎன்ஏ

Read Entire Article